பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


இவ்வாறு இந்த நூல் கிடைக்காமல் அவதிப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் எனக்கு அவமானம் ஒன்றுமில்லை.

இந்த நாட்டில் விளையாட்டுத் துறை இலக்கியங்களுக்கு அவ்வளவு தான் மதிப்பு இருக்கிறது. மரியாதை கிடைக்கிறது.

பள்ளிக் கூடப் பருவத்திலேயே விளையாட்டு நூல்களைக் கற்பிக்க வேண்டும் என்ற மனோ நிலையற்றவர் கள் நிறைய பேர்கள் இங்கு பொறுப்பேற்றிருக்கின்றார்கள். விவரம் தெரியாத மாணவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அவ்வளவாக விருப்பம் காட்டுவதில்லை.

என்றாலும் விளையாட்டுத்துறை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. விளையாட்டுத்துறை இலக்கியமும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது.

வளரும் இலக்கியத்தில் இந்நூல் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. எல்லோரும் கலந்து கொண்டு மகிழ்கிற, போட்டியிட்டுக் களிக்கிற ஒடுகளப் போட்டிகளின் விதி முறைகளை விளக்கிக் கூறுகிற, முதல் முறையாக வெளி வரும் இந்த நூலை, பயன் தெரிந்தவர்கள் பெற்று, பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன்.

அழகுற அச்சிட்ட கிரேஸ் பிரிண்டர்சுக்கும், உதவிய மேலாளர் ஆதாம் சாக்ரட்டீசுக்கும் என் அன்பு நன்றியும் பாராட்டுக்களும். இது காறும் என் நூல்களை ஆதரித்து வரும் தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் வணக்கமும்.

அன்புடன்,

டாக்டர் எஸ். நவராஜ்செல்லையா

* இரண்டாம் பதிப்பில் வெளிவந்த ஆசிரியரின்முன்னுரை அப்படியே பிரகரிக்கப்பட்டுள்ளது. - பதிப்பாளர்