பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



68

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அவ்வாறு போட்டியிடச் செய்ய நடை செய்முறை சாத்தியம் இல்லையென்று நடுவர் தீர்மானித்து முடிவு செய்துவிட்டால், இறுதி ஒட்டப்போட்டியின் முடிவு அப்படியேதான் இருக்கும்.

மற்ற இரண்டாம் மூன்றாம் நான்காம் இடங்களுக்கான முடிவுகள் அப்படியே தான் இருக்கும்.

உயரமாகத் தாண்டும் களப்போட்டிகள்

2. காலூன்றி அல்லது கோலூன்றி உயரமாகத் தாண்டும் போட்டிகளில் சமநிலை ஏற்படுகிறபொழுது.

(அ) எந்த உயரத்தில் சமநிலை ஏற்பட்டதோ, அந்த உயரம் வரை, யார் குறைந்த எண்ணிக்கையில் தாண்டும் வாய்ப்பினைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை எண்ணி, குறைந்த எண்ணிக்கையில் தாண்டும் வாய்ப்பு பெற்றிருந்த போட்டியாளரை (Lowest Number of Jumps) முதலாவதவது இடத்திற்குத் தெரிவு செய்ய வேண்டும்.

ஆ) மீண்டும் முடிவு செய்ய முடியாத வண்ணம் சம நிலை தொடர் ந் தாலி , அந் தப் போட் டித் தொடங்கியதிலிருந்து அதாவது கடைசி உயரம் தாண்டியது வரை, எத்தனை தவறுகள் இழைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து அதில் மொத்தத்தில் முயற்சியில் குறைந்த எண்ணிக்கையில் (Lowest Total Number of Failures) தோற்றவரை, முதலாவதாகத் தெரிவு செய்திடவேண்டும்.