பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



72

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


(உதாரணம் 2 மறுபக்கம் காண்க.) 3. நீளத்தாண்டல், மும்முறை தாண்டல், மற்றும் எறி நிகழ்ச்சிகளாக இரும்புக்குண்டு எறிதல், தட்டெறிதல், வேலெறிதல், சங்கிலிக் குண்டு ஏறிதல் போன்ற நிகழ்ச்சிகளில் சமநிலை ஏற்படுகிறபொழுது:

தாண்டும் அல்லது எறியும் போது, செல்கிற தூரத்தை அளந்து முடிவெடுக்கிறபொழுது, சமநிலையில் இருக்கிற போட்டியாளர்களின் இரண்டாவது அதிக தூரத்தை Second Best) எதுவென்று கண்டுபிடித்து, அதன்படி முதலாம் இடத்தை நிர்ணயிக்க வேண்டும்.

இப்பொழுதும், முடிவெடுக்க முடியாத சிக்கல் நிலை வந்தால், அவர்கள் எறிந்த மூன்றாவது (சிறந்த) அதிக தூரத்தை (Third Best) பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து கண்டுபிடித்து முடிவு செய்ய வேண்டும்.

குறிப்பு : அகில உலகப் போட்டிகளில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் சமநிலை வாய்ப்பைப் பெறுகிற பொழுது, சமநிலை தீர்க்கும் விதிகள் பின்பற்றப்படுவதில்லை. எந்த இடத்திற்கு (Place) சமநிலை எழுந்ததோ அதற்குரிய, வெற்றி எண்களை, அவர்களுக்குப் பிரித்து பகிர்ந்தளிக்கப்படும்.