பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


8. எதிர்ப்பு மனுக்கள்
(Protests)
(விதி : 146)

1. ஒரு போட்டியாளர் தமது எதிர்ப்பு மனுவை, அந்தப் போட்டிகள் (Meeting) முடிவதற்கு முன்னதாக, நீதிக்குழுவிடம் கொடுத்துவிடவேண்டும். இவ்வாறு நீதிக்குழு அமைக்காவிட்டால், குறிப்பிட்ட தலைமை நடுவரிடம் கொடுத்து விட வேண்டும்.

அந்தப் போட்டிகள் முடிவதற்கு முன்னர், அந்தக் குறிப்பிட்டப் பிரச்சினை திருப்திகரமாக தீர்க்கப்படாமற் போனால், எதிர்ப்புடன் அந்தப் போட்டியில் பங்கு பெறுகிறாள் என்று குறிப்பு எழுதி வைத்து அவரைப் பங்கு பெறச் செய்துவிட்டு, பிரச்சனைக்குரிய அந்த விஷயத்தை அகில உலக அமெச்சூள் கழகத்திற்குத் தெரிவித்து விட வேண்டும்.

2. போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏற்படுகிற பிரச்சினையை உடனே எதிர்ப்பு மனு மூலம் தெரிவித்து விட வேண்டும். அதுவும் அதிகாரப்பூர்வமாக, குறிப்பிட்ட அந்தப் போட்டியின் முடிவை அறிவித்த 30 நிமிடங்களுக்குள்ளாக எதிர்ப்பு மனுவைக் கொடுத்துவிட வேண்டும்.

போட்டிகளை நடத்துகின்றவர்கள், எப்பொழுது ஒவ்வொரு போட்டியின் முடிவும் அதிகார பூர்வமாக