பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அந்தப் போட்டியாளரைப் பொறுப்பேற்கும் பொறுப்புள்ள அதிகாரி ஒருவர், கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

எழுதிய எதிர்ப்பு மனுவுடன் 1000 வில்லிங் அல்லது அதற்கு இணையான அவரது நாட்டின் பண்த்தையும் நீதிக்குழு விசாரணைக்கு அந்தப் பிரச்சினையை எடுத்துக் கொள்வதற்கு முன்னதாகக் கட்டி விட வேண்டும்.

எதிர்ப்பு மனு தோல்வியடைந்து போனால், அவர் கட்டிய பணத்தையும் இழந்து போக வேண்டும்.

சரியான முடிவினை எடுக்க, நீதிக்குழுவானது அங்கே கிடைக்கக்கூடிய அத்தனை சான்றுகளையும் பரிசீலிப்பதுடன், அந்தப் பிரச்சனைக்குச் சம்பந்தப்பட்டி அனைவரையும், தேவையானால் விசாரித்திட வேண்டும்.