பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



78

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அந்தப் போட்டியாளர், அல்லது குழுவின் சொந்த நாட்டின் தேசியக் கழகத்திற்கும் (மூன்று மாத காலத்திற்குள்ளாக) ஒரு பிரதியை (Duplicate) அனுப்பி வைக்க வேண்டும்.

தலைமைக் கழகத்தின் உறுப்பினரின் பார்வையில் பங்கேற்கிற போட்டியாளர் அல்லது போட்டியாளர்களுக்காக, அந்த உறுப்பினள் தான் மனுவை அனுப்பி வைக்க வேண்டும்.

3. எந்த நாட்டில் அந்த சாதனை ஏற்படுத்தப்பட்டதோ, அந்த நாட்டுத் தேசியக் கழகமும், அங்கீகரிக்கப்பட்ட அதிகார பூர்வமான அப்ளிகேஷனில் பதிவு செய்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.

நிரப்பி அனுப்பும் முறைகளாவன:

(அ) போட்டி நிகழ்ச்சிகளைக் குறித்துக் காட்டும. அச்சிட்ட அட்டவணை.

(ஆ) சாதனை நிகழ்ந்த அந்தப் போட்டி நிகழ்ச்சியின் முழு முடிவுகளையும் அனுப்புதல், அது கள நிகழ்ச்சியாக (Field) இருந்தால், அந்தப் போட்டியின் முடிவு தெரிவிக்கும் குறிப்பேட்டையும் கூடவே அனுப்ப வேண்டும்.

(இ) ஒட்டப் போட்டியாக இருந்தால், ஒட்ட முடிவினை எடுத்துப் புகைப்படப் பிரதி ஒன்றையும் (அதாவது அந்தப் புகைப்படம் எடுப்பதானது, முழுவதுமாக எலக்ட்ரானிக் மூலம் எடுக்கப்பட்டிருந்தால் மட்டும்) இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

4. ஒரு போட்டியானது, அகில உலகத் தலைமைச் கழகத்தின் அங்கீகாரத்தோடு நடைபெறுகிற பொழுது மேற்காணும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை.