பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

83


(ஈ) 200 மீட்டர் தூரமுள்ள ஓட்டங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட தூரமுள்ள ஓட்டங்கள், இவைகளில் ஏற்படுத்துகிற சாதனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அவைகள் 440 கெஜத்திற்கும் மேற்படாமல் அமைந்த ஒட்டப் பாதையில் (Track) ஓடி முடியப் பெற்றிருக்க வேண்டும்.

இந்த தூரத்தைக் குறித்துக் காட்டும் விதியானது, பெருந்தடை ஓட்டமான (Steeple Chase) ஓட்டத்திற்குப் பொருந்தாது. ஏனெனில், இந்த ஓட்டத்தில் இடம்பெறும் தண்ணி தாண்டும் தடையானது (Water Jump) 400 மீட்டள் ஒட்டப் பாதைக் கு வெளிப் புறமாகவே அமைக்கப்பட்டிருப்பதால் தான்.

(உ) ஒட்டப் பாதையின் அமைப் பானது, வெளிப்புறத்தில் அமைந்த ஓடும் பாதையானது 60 மீட்டருக்கும் மேற்போகாத ஆரமுள்ள (Radius) தாக வளைவுப் பகுதி உள்ளதாக அமைக்கப்பட்டிருப்பதில் ஏற்படுத்துகிற சாதனைதான் ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு : ஒரு ஒட்டப் பாதையின் பரப்பானது, 2 , வளைவுகளால் அமைக்கப்பட்டிருப்பதாகும். மேற்கூறப்பட்ட H எல்லைக் குறிப்பானது இந்த வளைவை ஏற்படுத்தும் அதிகப்படியான ஆரமாக இருந்தால், கட்டுப்படுத்தாது.

அதாவது இந்த வளைவின் (Bend) அமைப்பானது 180 டிகிரி திருப்பத்தில் (turn) 60 டிகிரிக்கும் மேற்பட்டதாக இல்லாமல் இருந்தால், ஏற்றுக் கொள்ளப்படும்.