பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



86

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


களப்போட்டி நிகழ்ச்சிகளில் உலக சாதனை ஏற்படுகிற பொழுது மீட்டர் அளவில் அதாவது குறைந்த பட்சம் 0.01 மீட்டள் குறைந்த அளவில் சாதனையைக் குறிப்பிடல் வேண்டும்.

களப் போட்டி நிகழ்ச்சிகளான தட்டெறிதல், வேலெறிதல், சங்கிலிக்குண்டு எறிதல் போன்றவற்றில் ஏற்படும் சாதனையைக் குறிக்க, 0.02 மீட்டர் அளவு (பின்னமில்லாமல் இருக்க) குறைந்த அளவில் குறித்திடல் வேண்டும். உதாரணமாக 62.44 மீட்டள், 62.46 மீட்டள் என்பதாக, பின்னமில்லாமல் முழு எண்ணில் குறிக்க வேண்டும்.

(ஆ) களப்போட்டி நிகழ்ச்சிகளில், ஒரு போட்டி நடைபெறும் போது, இயலாமை கருதி (Handicap) சேர்க்கப்பட்ட வாய்ப்பு அளித்து போட்டியிடும்போது, ஏற்படுகிற சாதனையை சரிபார்த்து முடிவெடுப்பதற்கேற்ற வகையில் (Ratification) தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

(இ) நீளத் தாண்டல், மும்முறைத் தாண்டல் நிகழ்ச்சிகளுக்கான சாதனைக் குறிப்புடன், காற்று வேகத்தின் அளவையும் இணைத்து அனுப்புதல் வேண்டும் (விதி 149 காண்க).

தாண்டுபவருக்குப் பின்புறமிருந்து அடிக்கின்ற காற்றின் வேகம் சராசரியாக ஒரு நொடிக்கு 2மீட்டர் தூரம் உதவுகிறது என்றால், அந்த நேரத்தில் ஏற்படுத்துகிற சாதனை அங்கீகாரம் பெறாமல் போய்விடும்.