பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

89




10. காற்று வேகத்தினை அளத்தல்
(Wind measurements)
(விதி - 149)

ஒட்டப் பந்தயத்தைத் தொடங்கச் செய்யும் துப்பாக்கி ஒலி அல்லது அங்கீகரிக்கப்பட்ட மற்ற சாதனங்களிலிருந்து ஒலி வெளிப்பட்ட பிறகு, குறிப்பிட்ட காலத்திற்குள் காற்றடிக்கும் வேகத்திறனை அளந்து முடிவுகளைத் தீர்மானிக்க பின்வரும் முறை பின்பற்றப்படுகிறது.

100 மீட்டர் தூர ஓட்டம் 10 நொடிகள்
100 மீ.தடைதாண்டி ஓட்டம் 13 நொடிகள்
110 மீ.தடைதாண்டி ஓட்டம் 13 நொடிகள்

200 மீட்டர்தூர ஓட்டம் என்றால், வளைவுப் பாதையில் ஒடும்பொழுது விட்டு விட்டு, நேர்பாதையில் (Straight) ஓடுகிறபொழுது 10 நொடிகள் காற்று வேகத்தைக் கணக்கிடவேண்டும்.

நீளத்தாண்டல், மும்முறைதாண்டல் நிகழ்ச்சிகளில் தாண்ட ஓடிவருகிற பாதையில், அவர் ஓடத் தொடங்குகிற சமயத்திலிருந்து 5 நொடிகள் காற்று வேகத்தைக் கணக்கிடவேண்டும்.