பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



92

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


12. ஒட்டப்போட்டி நிகழ்ச்சிகள்
(Running Events)
(விதி - 161)

1. ஒடுகளத்தின் (Track) மொத்த நீளம் 400 மீட்டர் தூரத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

ஒடுகளத்தின் அகலம் 7.32 மீட்டள் இருக்க வேண்டும். முடிந்தால், ஓடுகளப் பாதையின் உட்புறமானது கான்கிரீட் அல்லது அதற்கு இணையான தரமுள்ள பொருட்களால் 50 மில்லி மீட்டர் உயரமும், 50 மி.மீட்டர் அகலமும் கொண்ட கட்டையாகச் சுற்றிக் கட்டப் பட்டிருக்கவேண்டும்.

குறிப்பு: ஓடுகளப் பாதையின் உட்புறத்தில் தண்ணி தேங்கி நின்று போகாமல், விரைந்து வெளியேறுவதற்கு வகை செய்யும் வகையில், அதன் பரப்புப் பகுதிகள் 65 மி.மீ உயரம் சற்று மேடான பகுதியாக அமைக்கப்படலாம்.

ஒடுகளப் பாதையின் உட்புறத்தில் உயர்ந்த கட்டைச்சுவர் (Border) கட்ட இயலாதபோது, அந்த உட்புறமாக 50 மி.மீ. அகலத்தில் கோடிட்டுக் குறித்து வைக்க வேண்டும்.

அது பசும்புல் தரையிலான ஒடுகளைப் பரப்பாக இருந்தால், 5 மீட்டர் தூரம் இடைவெளி விட்டு விட்டுக் கொடிகள் நட்டுக் குறித்துக் காட்டிட வேண்டும்.

கொடிகள் உட்புறத்தில் உள்ள கோட்டின் மீதே நடப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடுவதானது, கோட்டின் மேலே ஒட்டக்காரர்கள் ஓடிச் செல்லாமல் தடை செய்வதாக விளங்கும். கொடிகளை 60 டிகிரி அளவில் உட்புற ஒடுகளப் பகுதி பக்கமாக சாய்ந்திருக்குமாறு நடுதல் வேண்டும்.