பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


5. அகில உலகப்போட்டிகளில், குறைந்தது 6 ஓடும் பாதைகளாவது இருக்க வேண்டும். இன்னும், மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகின்ற உலக அளவுப் போட்டிகளில் முடிந்தால், 8 பேர்கள் ஓடுகின்றவாறு 8 ஓடும் பாதைகள் அமைக்கலாம்.

ஓடுகளப் பாதையின் ஒரு பக்கத்திலிருந்து முன்புறமாக நோக்கிச் செல்லுகிற வழியின் (சரிவு) இறக்கமானது (Inclination) 1:100 என்ற அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓடுகிற திசைப் பக்கமாக உள்ள பாதையின் தரைப்பகுதியின் இறக்கமானது 1:1000 என்ற அளவுக்கு தாழ்வது மிகாமல் (தாழ்ந்து போகாதவாறு) இருக்க வேண்டும்.

குறிப்பு: புதிய ஓடுகளப் பாதைகள் அமையும் போது, உட்புறக் கோட்டை நோக்கித் தரை சரிவு போகுமாறு அமைக்க வேண்டும் என்பதை தலைமைக் கழகம் பரிந்துரை செய்கிறது.

7. 800 மீட்டர் ஓட்டத்தில், முடிந்தவரை, எல்லோரையும் ஓடுகளப் பாதையில் ஓடவிட வேண்டும். ஓடும் பாதையில் முதல் வளைவு (Bend) முடியும் வரை அவர்கள் ஓடிடவும், இருக்கின்ற எல்லா ஓட்டப் பாதைகளையும் (Lanes) ஓட்டக்காரர்கள் ஓடுமாறு பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

ஒவ்வொரு ஓட்டக்காரரும் சமவாய்ப்பு தருகின்ற முன் எல்லை வாய்ப்பினை (Stagger) பகிர்ந்தளித்து, முழு தூரத்தை ஓடும்பொழுது, அனைவரும் சமமான தூரத்தை ஓடி முடிக்கும் வகையில் அமைத்துத் தந்திட வேண்டும்.

குறிப்பு: அகில உலகப் போட்டிகளில் இவ்வாறு முன்னெல்லை வாய்ப்பளித்து ஓட விடுகின்ற முறையைத் தவிர்த்து விடலாம் என்று பல நாடுகள் இணங்கி ஒத்துக் கொண்டால், அவ்வாறே ஓட விடலாம்.