பக்கம்:அங்கும் இங்கும்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

வீரர் லெனினிடம் எதிர்பார்க்கவில்லை. இது மாணவர்களுக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

புரட்சி என்ன எளிதான முயற்சியா ? ஒரு முறைக்குப் பல முறை தோற்ற வினையல்லவா ? பல்லாயிரக்கணக்கானவர்களைப் பலி கொண்டும் தோற்றதல்லவா ? புரட்சி. வலிமை மிக்க ஜாராட்சியைக் கவிழ்க்க, எல்லாரையும் எல்லாவற்றையும், கிடைத்தவர்களையெல்லாம், கிடைத்தவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டாவா ? இக்கேள்விகள், புரட்சித் தலைவர் லெனினுக்கு எட்டின.

"புரட்சி மிகக் கடுமையானதே ! அது வெற்றி பெறப் பல ஒத்திகைகள் தேவைப்படலாம். அவற்றில், பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் விளையலாம். எத்தனை விலையானாலும், அதைக் கொடுத்து, ஒரு நாள் வெற்றி பெறுவோம். அப்புறம் ? புதிய சமதர்ம ஆட்சியை நிலைபெறச் செய்ய, கட்டிக்காக்க, வளப்படுத்த. வலுப்படுத்த, பல்லாண்டுகள் ஆகுமே! சோவியத் ஆட்சித் தந்தைகளான முதியவர்களே, காலமெல்லாம், உயிரோடிருந்து, காக்க முடியுமா ? இளைய பரம்பரையன்றோ முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்? ஜார் ஆட்சிக்கு உள்ள எதிர்ப்பைவிடச் சோவியத் ஆட்சிக்கு உள்ள எதிர்ப்பு, தொடக்க நிலையிலாவது அதிகமாக இருக்கும்; பல ஆண்டுகளுக்கு இருக்கும். உலக எதிர்ப்புக்கிடையில் சோவியத் ஆட்சி முறையைக் காத்து, வளர்க்க வேண்டிய இளைஞர்களை-மாணவர்களைப் புரட்சி நெருக்கடியில் இழுத்து விட்டால், நாளை சமதர்ம ஆட்சியைத் திறம்பட நடத்தப் போதிய அறிஞர்கள். விஞ்ஞானிகள், விற்பன்னர்கள், மேதைகள் பஞ்சம் வந்துவிடுமே. ஆகவே மாணவர்களை மாணவர்களாகவே விட்டுவைப்போம்.

படிப்பிலேயே ஊக்குவோம் முதியவர்களாகிய நாம் மற்றவற்றைப் பார்த்துக்கொள்வோம். இரஷியாவின் நீண்ட
அ.இ.-3