பக்கம்:அங்கும் இங்கும்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

கஞக்கும் சாதாரண கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் நடக்கும் பாடத்திட்டத்தை ஒட்டி, பாட முறைகளை அமைப்பதில்லை.

முதியவர்களான பிறகு, புதுப்புதுக் கல்வி ஆசை எழுவதுண்டு. தமது தொழில் முன்னேற்றத்திற்கோ ஏதாவது ஒரு துறையில், படிக்கவோ பயிற்சி பெறவோ ஒருவர் விரும்பலாம். இக்கல்விக் கூடத்தில் சேர்ந்து, விரும்பிய படிப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபடலாம்.

இங்குச் சேர்த்துக்கொள்ள, நுழைவுச் சோதனை ஏதும் இல்லை. பாடங்களில், ஒரே நிலை வகுப்பும் இல்லை. குறிப்பிட்ட பாடத்திலேயே இரண்டு மூன்று நிலை வகுப்புகள் நடக்கும்.

அப்படியானால், எந்த அடிப்படையில் எந்த வகுப்பில் மாணவர்கள் சேர்ந்து பயில்வது?

மாணவர், தான் எந்த நிலைக்குத் தகுதி என்று நினைக்கிறாரோ, அந்நிலை வகுப்பாசிரியரோடு கலந்து பேசி, அவ்வகுப்பிலேயே சேரலாம்.

இக்கல்விக்கூட சேர்க்கையிலோ, வகுப்பு மாற்றத்திலோ,பாட முறையிலோ கெடுபிடி கிடையாது குறிப்பிட்ட பொதுப் பரிட்சையில் தேற வைப்பதன் மூலமே நற்பெயர் எடுக்க வேண்டிய நெருக்கடியும் இல்லை ! ஆகவே பாடப் போக்கிலே, நெளிவு சுளுவைக் காணலாம். ஏற்ற இறக்கத்தைக் காணலாம். ஒரு பகுதியை வேகமாகக் கடப்பதையும் மற்றொரு பகுதியை மெல்லக் கடப்பதையும் காணலாம்.

கெடுபிடிகள் இன்றி, நம்பி விட்டிருப்பது இக்கல்விக் கூடத்தை. மட்டுமா ? இல்லை. எல்லா முதியோர் கல்விக் கூடங்களும் இத்தகைய சுதந்திரத்தோடு இயங்குகின்றன.