பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் சாஸனம்

97

4. தர்மத்தைப் பரவச் செய்தல்,

இதன் முன் பல வருடங்களாகப் பிராணி இம்சையும், பிராணிகளைப் பலியிடுதலும், சுற்றத்தாரை அசட்டைசெய்வதும், பிராமண சமணர்களை அவமதிப்பதும் அதிகரித்து வந்தன. இப்போது தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் தர்மத்தை வழிபட்டிருப்பதால் தர்மத்தின் ஜயபேரிகை முழங்குகின்றது. ஜனங்கள், யானைத்திருவிழா,தேர்த்திருவிழா, லக்ஷ தீபம் முதலிய உற்சவங்களைக் கண்டு களிக்கின்றனர். பல ஆண்டுகளாக ஒருபோதும் சம்பவியாத விசேஷம் தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் தர்மத்தைத் தழுவியதால் சம்பவித்திருக்கின்றது. பிராணிகளைக் கொல்லாமை, ஜீவராசிகளிடம் அஹிம்ஸை, உறவினரிடம் அன்பு, பிராமண சமணர்களிடம் கௌரவம், தாய்தந்தையருக்குச்

சுச்ரூஷை, மந்திரக்கிழவருக்குச் சுச்ரூஷை என்ற நற்குணங்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசனது புத்திரர்களும் பௌத்திரர்களும் பௌத்திரரின் பிள்ளைகளும் கல்பாந்த காலம் வரையும் தர்மத்திலும் சீலத்திலும் வழுவாது நிலைநின்று தர்மத்தைப் போதிக்கக் கடவர். தர்மத்தைக் கற்பிப்பது உயர்ந்த காரியமே.சீலமில்லாதவன் தர் மத்தைத் தழுவி ஒழுகுவது கஷ்டமாம். ஆயினும் இவ்விஷயத்தில் மனிதன் உள்ளம் சீர்திருந்து-

7