பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/115

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆறாம் சாஸனம்

103

கருதக்கடவேன். இதற்கு மூலகாரணம் ஜாக்கிரதையும் ஊக்கமுடைமையுமே2 சகல ஜனங்களுடையவும் நன்மையைக் கருதுவதைவிட மேன்மையான கருமமில்லை. எதற்காக நான் இங்ஙனம் பிரயாசையுடன் முயன்றுவருகிறேன்? ஜீவராசிகளுக்கு நான் செலுத்தவேண்டிய கடன் செல்லாவதற்கும் சிலருக்கேனும் இம்மையில் சுகமும் மறுமையில் சுவர்க்கமும் கிடைப்பதற்குமேயாம். இதற்காகவே இந்த தர்மலிபி வரையப்பட்டிருக்கிறது. எதற்காக ? என் கட்டளை நெடுங்காலம் நிலைபெறவும் என் புத்திரரும் பௌத்திரரும் இவ்விதமே உலகத்தின் க்ஷேமத்திற்காக உழைத்து வருவதற்குமே. விசேஷமான ஊக்கமிருந்தாலன்றி இது கஷ்டமான காரியம்.

மொத்தம் 17 வாக்கியங்கள், ஐந்தாம் சாஸனத்திற் போல் இங்கும் ஒரு வாக்கியம் கருத்து விளங்குவதற்குக் கஷ்டமாயிருக்கிறது. அது, 6-வது வாக்கியம்.

1. வினீதம் என்ற சொல்லுக்கு சிறுவண்டி யென்றும் கவாத்துப் பழகும் இடமென்றும் பழகின குதிரை யென்றும் பொருள் கூறப்படுகின்றன.“வினீதா : ஸாயு வாஹிந:" அமரம் II. 8.44.

2. உத்யானம் ஜாக்கிரதை. அர்த்தஸந்தீரணா அரசாட்சி விஷயமான ஊக்கம். கவனம் : கௌடல்யனுடைய அர்த்த சாஸ்திரத்திலும் இக்குணம் அரசருக்கு எவ்வளவு அவசியமென்று எழுதியிருக்கிறது (அதி. I. அத் 19.) ஆயினும் அரசனுடைய ஒவ்வொரு வேலைக்கும் நேரம் குறிப்பிட்டு அவனது தினசரியை மிக நுட்பமாகவிளக்கப்பட்டிருக்கிறது.

அசோகன் இவ்விஷயத்தில் பழைய வழக்கங்களின் நிபந்தனையை அங்கீகரிக்க வில்லையென்று இச்சாஸனத்திலிருந்து தெளிவாகும்.