பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலிங்க சாஸனம் : க

123

அரசனுடைய நன்மதிப்பையும் இழக்கின்றனர். எனது கட்டளைகளைச் சரியாகச் செய்கிறவன் சுவர்க்கத்தை அடைந்து எனக்கு செலுத்தக் கடவதான கடனையும் தீர்க்கின்றான். இந்தச் சாஸனம் கேட்போன் ஒருவனாயிருந்தபோதிலும், ஒவ்வொரு பூச நக்ஷத்திரத்தன்றும் வேறு புண்ணிய தினங்களிலும் உரக்கப் படிக்கவேண்டும். இவ்விதம் பிரவிர்த்தித்து நீங்கள் என் நோக்கங்களை நிறைவேற்ற முயலுங்கள். நகரத்தின் வியோஹாலகர்3 அகாரணமாய் நகர ஜனங்களைச் சிறைசெய்தல், காரணமின்றி வருத்துதல் போன்ற வழக்கங்களைத் தவிர்ப்பதற்காக இந்தச் சாவனம் வரையப்பட்டிருக்கிறது.

இதற்காகவே தர்மத்தை அனுசரித்து நான் ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை அனுஸம் யானம் என்ற ஏற்பாடு செய்திருக்கிறேன் ; அதற்காகத் தெரிந்தெடுக்கப்படும் மகாமாத்திரர் கொடுமையில்லாதவராயும் அன்புடையோராயும் கொல்லா விரதத்தை அனுஷ்டிக்கின்றவராயும் இருத்தல் வேண்டும். அவர்கள், என் நோக்கத்தையறிந்து அதன்படி வேலைபார்ப்பவராயிருத்தல் வேண்டும். உஜ்ஜயினியிலுள்ள இளவரசனும் இவ்விதமே மூன்று வருஷத்துக்கு ஒரு முறை அதிகாரிகளை அனுப்பவேண்டும். இதுபோலவே தக்கசிலாவி லுள்ளவர்களும் மகாமாத்திரரைக் கொண்டு. அனுஸம்யானம்