பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சாஸனங்கள்

இதற்காகவே நான் உங்களுக்கு இக் கட்டளையிடுகிறேன். என் விருப்பத்தை உங்களுக்கு அறிவித்து எனது ஸ்திரமான தீர்மானத்தையும் மாறாத நிச்சயத்தையும் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் உங்கள் கடமைகளை நிறைவேற்றி 'அந்தமனிதர்' என்னை நம்பவும், 'அரசன் ஜனங்களுக்குத் தந்தை போன்றவன், தந்தை தம் மக்களுக்கு இரங்குவதுபோலவே அரசன் நமக்காக இரங்குபவன்,' என்ற உண்மையை உணரவுஞ் செய்ய வேண்டும். நான் உங்களுக்கு எனது ஸ்திரமான தீர்மானத்தையும் மாறாத நிச்சயத்தையும் அறிவித்து ஆயுக்தர் தமது வேலையில் விழிப்பாயிருக்கச் செய்கிறேன். இவ்விஷயத்தில் நீங்களே இம்மனிதர் என்னை நேசிக்கவும் அவருடைய இகபர க்ஷேமத்தை உறுதிசெய்யவும் கூடிய நிலைமையில் இருக்கிறீர்கள். இப்படிச் செய்வதால் நீங்களும் சுவர்க்கத்தை அடைவதோடுகூட எனக்குச் செலுத்தக் கடவ தான கடனையும் செலுத்துகின்றீர்கள். மகா மாத்திரர் இடைவிடாமல் எல்லைமனிதருடைய நன்மதிப்பை அடைய முயலவேண்டுமென்றும் அவர் தர்மத்தை வழிபடவேண்டுமென்றுமே இந்த லிகிதம் வரைந்திருக்கிறது. இச்சாஸனம் சாதுர்மாஸிய புண்ணிய காலங்களிற் படிக்கப் படவேண்டும்; பூச நக்ஷத்திரத்தன்றும் படிக்கப் படவேண்டும். இந்நாட்களுக்கிடையிலும், தகுந்த அவசரங்களிற் கேட்பவன் ஒருவனே