பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தாம் ஸ்தம்ப சாஸனம்

137

பிராணிகளைக் கொல்லவாவது நெருப்புவைத்து விடக் கூடாது. ஜீவப் பிராணிகளுக்கு மற்ற ஜீவப் பிராணிகளை இரையாகக் கொடுத்து வளர்த்தல் கூடாது. மூன்று சாதுர்மாஸிய தினங்களிலும், தை மாதத்துப் பௌர்ணமியிலும், மற்ற மாதங்களில் மூன்று தினங்களிலும், அஃதாவது, சுக்லபக்ஷத்து சதுர்த்தசி, பௌர்ணமியை யடுத்த பிரதமையன்றும் மற்ற நோன்பு நாட்களிலும், மீன்பிடித்தல் மீன்விற்றல் தவிர்க்கப்படுகின்றன. இந்நாட்களில் யானைக்காவிலோ மீன் குட்டையிலோ இவைபோன்ற மற்ற ஜீவப்பிராணிகளின் நிலயங்களிலோ ஒன்றையும் கொலை செய்யக்கூடாது. அஷ்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி அமாவாசை நாட்களன்றும் பூச புனர்பூச நக்ஷத்திரங்களன்றும் மூன்று சாதுர்மாஸிய தினங்களன்றும் மற்ற சுபதினங்களிலும் மாடுகளுக்கு விதையடித்தல் கூடாது ; அது போலவே, வெள்ளாடு செம்மறியாடு பன்றி முதலிய பிராணிகளுக்கும் இவை போன்ற மற்றப் பிராணிகளுக்கும் விதையடித்தல்1 கூடாது. பூச புனர்பூச நாட்களன்றும் சாதுர் மாஸிய காலத்தில் சாதுர்மாஸ பக்ஷங்களில்2 குதிரைகளுக்கும் மாடுகளுக்கும் சூடுபோடுதல் கூடாது. நான் முடிசூடிய இருபத்தாறாம் ஆண்டுவரை இருபத்தைந்து முறை சிறை விடுதலை நடந்திருக்கிறது.