பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழாம் ஸ்தம்ப சாஸனம்

143

அவரிடம் சேர்ப்பித்திருக்கிறேன். அதுபோலவே பிராமணர் ஆஜீவகர்களுடைய காரியங்களையும் அவரிடம் ஒப்புவித்திருக்கிறேன். அதுபோலவே நிர்கிரந்திகளின் (ஜெயினரின்) காரியங்களையும் அவரிடம் ஒப்புவித்திருக்கிறேன். எல்லா மதத்தாரின் காரியங்களையும் அவர் கவனித்து வரவேண்டும். சாதாரண மகாமாத்திரர் தந்தம் வேலையை மட்டும் பார்ப்பார்கள். தர்ம மகாமாத்திரரோ எல்லா மதங்களின் காரியங்களையும் பார்வையிட வேண்டும்.

VII. தேவர்களுக்குப் பிரியனான பியதஸிராஜன் இப்படிச் சொல்லுகிறான். முன் கூறப்பட்ட தர்ம மகாமாத்திரரும் மற்ற மகாமாத்திரர்களும் எனது தானங்களையும் என் ராணியாரின் தானங்களையும் நடத்திவரவேண்டும். இங்கேயும் (பாடலிபுரத்திலும்) மாகாணங்களிலுமுள்ள ராஜக் கிருகங்களில் வசிப்போருடைய தானங்களுக்குத் தகுதியான வழிகளைக் காண்பிப்பதும் இவ்வதிகாரிகளின் அலுவலாம். என் புத்திரர், ராஜகுமாரர்கள், ராணியின் புத்திரர் செய்யும் தானங்களையும் இந்த அதிகாரிகளே நடத்தவேண்டும். இப்படிச் செய்வதால் தர்மகாரியங்களும் தர்மத்தின் அனுஸரணையும் விர்த்தியடைகின்றன. தர்மத்தின் அனுஸரணை எப்படிப்பட்டதென்றால் அது பின் வருமாறு. இரக்கம் ஔதாரியம் சத்தியம் தூய்மை வணக்கம் பரிசுத்தம் என்றவையே தர்மத்தின் அனுஸரணை. இவை மனிதருள் வளர்ந்து வரும்.

VIII. தேவர்களுக்குப் பிரியனான பியதஸி