பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


VI ஸார்நாத் சாஸனம்

காசியின் அருகாமையிலுள்ள ஸார்நாத் முன் ஒரு பெரிய பௌத்தக்ஷேத்திரமாயிருந்தது. புத்தரின் தர்மப் பிரசாரம் ஆரம்பித்தது இவ்விடத்திலேயே. 1905-06ம் வருஷத்தில் இவ்விடத்திலுள்ள புராதன வஸ்துக்களைத் தேட ஆரம்பித்தபோது இங்கு பற்பல அபூர்வ வஸ்துக்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் மிகவும் அற்புதமானது ஸார்நாத் ஸ்தம்பம். இதன் மேல்புறம் இன்னும் இரத்தினம் இழைத்தாற்போல பளபளப்பாயிருக்கிறது, ஸ்தம்பம் முதலில் அசோகனுடைய தீர்த்த யாத்திரையின்போது ஸ்தாபிக்கப்பட்டதாயிருக்கலாம். இதன் சிகரத்தைப்பற்றி அவதாரிகையில் கூறியிருக்கிறோம். இந்த லிகிதம் மற்ற அசோக லிகிதங்களின் கருத்தை விளக்க நிரம்ப உபகாரமாயிருந்தது, ஸார்நாத் சாஸனத்தின் சில வாக்கியங்கள் 1904 க்கு முன்னேயே சாஸன பரிசோதனைக்காரர்களுக்குத் தெரியும். ஏனென்றால், ஸார்நாத் சாஸனத்தின் முதற்பாகம் மட்டும் பிரயாகை ஸ்தம்பத்தின் ஒர் மூலையிலும் ஸாஞ்சி ஸ்தம்பத்திலும் எழுதப்பட்டிருந்தன. ஆயினும், இந்த லிகிதங்களில் பல சிதைவுகளிருந்தமையினாலும் வேறு சிறு வித்தியாசங்கள் இருந்தமையினாலும், இவற்றின் கருத்து சரியாய் விளங்கவில்லை. ஸார்நாத் சாஸனம் கிடைத்தபின் மற்ற இரு லிகிதங்களும் இச்சாஸனத்தின் கட்டளையை விளம்பரஞ் செய்யவே என்பது விளங்கிற்று.

பாப்ரு சாஸனத்தைப்போல இந்த ஸார்நாத் சாஸனமும் அசோகன் சார்வபௌமனாக இருந்ததோடுகூட, பௌத்த ஸங்கத்தின் தலைவனாகவும் விளங்கினானென்று தெரிவிக்கின்றது, இந்தத் தலைமை ஸ்தானம் சட்டத் திட்டங்களின்றி ஆசரணையையும் வழக்கத்தையும் மட்டுமே அனுஸரித்ததாயிருந்திருக்கலாம். சாஸனத்தின் ஆரம்பத்தில் ஓர் வரி அழிந்திருக்கிறது, நஷ்டமான