பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸார்நாத் சாஸனம்

147

வரியை மற்றப் பாகத்தின் நோக்கத்திலிருந்து அனுமானித்து பூர்த்திசெய்திருக்கிறது.

ஸார்நாத் லிகிதம் ஒருவேளை அசோகன் கூட்டிய 'மூன்றாவது பௌத்தமத சபையை யொட்டிய தாயிருக்கலாமென்று நாம் ஊகிக்கிறோம். இச்சாஸனம் அந்த சபையின் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டுவருவதற்குள்ள கட்டளைபோலும். இச்சாஸனம் அரசனின் கடைசி வருஷங்கள் ஒன்றில், அதாவது சுமார் கி.மு. 240-ல் எழுதப்பட்டிருக்கலாம். மகாசபையும் அதே வருஷத்திலேயே நடந்திருக்கவேண்டும்.

சாஸனத்தில் உபோஸ தம் என்று கூறப்பட்டிருப்பது சுக்லபக்ஷத்துச் சதுர்த்தசியன்று அல்லது பௌர்ணமியன்று இரவு நடைபெற்று வந்த சடங்கு ஒன்றும். இந்த நாட்களில் பௌத்த பிக்ஷுக்கள் பகல் முழுதும் உபவாஸமாயிருந்து இரவில் தங்கள் விஹாரத்தில் அல்லது மற்றோரிடத்தில் ஒன்றுகூடி தந்தம் சரியையில் நேர்ந்த குற்றங் குறைவுகளைச் சொல்லிப் பிராயச்சித்தம் செய்து கொள்ளுவது வழக்கம். நாம் முன் கூறியுள்ள பாடி மோஹம் என்பது இச்சடங்கில் உபயோகிக்கப்படும் வாக்கியங்களே. - இச்சடங்கு மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டதென்று பௌத்தப் பிரபந்தத் திரட்டிலிருந்து நாம் அறிகிறோம். இல்லறத்தில் ஒழுகும் உபாஸகரும் இச்சடங்கின்போது வந்திருக்கவேண்டுமென்பது அசோகனுடைய விருப்பம் போலும்.

தேவர் பிரியன் (இங்ஙனம் கூறுகிறான். ......) பாட (லிபுரத்திலுள்ள மகாமாத்திரரும் மற்ற மாகாணங்களிலுள்ள மகாமாத்திரரும் இவ்விதம் ஆக்ஞாபிக்கப்படுகின்றனர்.)

ஒன்றாயுள்ள ஸங்கத்தில் பிளவுகளைச்