பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

சாஸனங்கள்

செய்தல் கூடாது. ஏதாவது பிக்ஷு அல்லது பிக்ஷணி சங்கத்தைப் பிளவு செய்வாராயின் அவரை வெள்ளை வஸ்திரம் அணியச் செய்து மற்றவரோடு சேராமல் தனியாக வசிக்கச் செய்வோம். இக்கட்டளை பிக்ஷு சங்கங்களுக்கும் பிக்ஷணி சங்கங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்கிறேன்.

தேவர் பிரியன் இவ்விதம் கூறுகிறான். இந்த லிகிதத்தின் ஒரு நகல் நமது உபயோகத் துக்காக உம்முடைய கார்யாலயத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மற்றொரு நகல் உபாஸகருக்கு உபயோகமாகும் பொருட்டு அவர் (வீடுகளுக்கு) அருகில் எழுதவேண்டும். உபோஸத தினந்தோறும் (நோன்பு நாட்கள்தோறும்) எல்லா மகாமாத்திரரும் இந்நோன்பு நாட்களில் நடைபெறும் உபோலதச் சடங்கின்போது வந்திருந்து இவ்வாணையைக் கேட்டு உணர்ந்து, இதை மற்றோருக்கும் ஆக்ஞாபிக்க வேண்டும். உமது எல்லைக்குட்பட்ட எல்லா ஊர்களுக்கும் பிரதேசங்களுக்கும் நீர் இவ்வுத்தரவின்படி (ஆசாரவேறுபாடுடையோரை) நீக்குதல் வேண் டும். கோட்டை நகரங்களிலும் நாடுகளிலும் எங்கும் இதுபோலவே நீக்குதல் நடைபெற வேண்டும்.

முதலிரண்டு வாக்கியங்கள் மாய்ந்திருக்கின்றன. அவை . போக மீதியுள்ளவை 9. (1) ஸம்ஸலன கார்யாலயம். (2) விவாஸ், குற்றமுள்ள துறவிகளை நீக்குதல்.