பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனின் சரிதை

21

டிருக்கின்றன. கன்னிங்ஹாம் துரை 1873-ம் ௵ல் ஸாஞ்சியின் அருகேயுள்ள ஏராளமான புராதன வஸ்துக்களைச் சோதனை செய்தபோது பௌத்த முனிவரின் எலும்புகள் நிக்ஷேபிக்கப்பட்ட பாத்திரங்கள் அகப்பட்டன. இரண்டு பாத்திரங்களின் புறத்தில் “ஹிமவந்தப் பிரதேசத்தின் ஆசாரியனாகிய காசியப கோத்திரன் சாம்பல்” என்றும், “ஹிமவந்தப் பிரதேசத்தின் ஆசாரியனாகிய மஜ்ஜிமன் சாம்பல்” என்றும் லிகிதங்கள் காணப்பட்டன. மகாவம்சத்திலும் இப்பெயர்களுடைய ஆசாரியர் அசோகன் காலத்தில் இமயமலை அல்லது ஹிமவந்தப் பிரதேசத்தில் தர்மத்தைப் போதித்தனரென்று கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸுவர்ண பூமி, அல்லது ஸோவன பூமி என்று கூறப்படும் பர்மா தேசமும் அசோகன் தூதர் மூலமாக பௌத்த தர்மத்தைச் செவியுற்றதென்று இங்கு சொல்லப்படுகிறது. அசோகனுடைய ராஜ்யத்துக்கு உட்படாத வேறு பலதேசத்தார் அசோகன் மூலமாகவே பௌத்த தர்மத்தை அறிந்தனரென்பது உண்மையே. தென் இந்தியாவில் சுதந்திர அரசர்களாயிருந்த சோழர் பாண்டியர், ஸத்தியபுத்திரர், கேரள புத்திரர் நாடுகளில் தர்ம போதனைகளும் தர்மீயமான உபகாரச் செய்கைகளும் நடந்துவந்தன. சிலோன் தீவிலுள்ள ஜனங்களும் முதன் முதல் புத்தரின் ஸந்தேசத்தைக் கேட்டது அசோகன் மூலமாகவே. அசோகனுடைய சகோதரன் மகேந்திரனும், சகோதரி ஸங்கமித்திரையும் இங்கு தர்மப் பிரசாரஞ் செய்யும்பொருட்டு அனுப்பப்பட்டார்களென்று இதிகாஸங்கள் கூறுகின்றன. தென் இந்தியாவிலும் இவர் பௌத்த தர்மத்தைப் பரவச் செய்தனர்போலும். மகேந்திர விஹாரம் என்ற பெயருடைய மடம் ஒன்று தென்-