பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனின் சரிதை

23

ஏகாதிபத்தியத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். பதின்மூன்றாம் சாஸனத்தில் கூறியிருக்கும் ஐந்து அரசர்களின் ராஜ்யங்கள் அலக்ஸாந்தரின் ஏகாதிபத்தியத்திலிருந்து உண்டானவை. சாஸனத்தில் ஐந்து அரசரின் பெயர் மட்டும் கூறப்பட்டிருக்கிறது. இவருடைய காலமும் தேசமும் பின் வருமாறு:-


ஐந்து அரசருக் இவ்வரசரின் இவர் ஆண்டு காலம்
குச் சாஸனங்க
ளில் வந்துள்ள ஐரோப்பியப் பெயர். வந்த தேசம் கி.மு.
ளில் வந்துள்ள
பெயர்,

அன்டி யோக்க இரண்டாம் ஆண்டி ஸிரியா 261-246
யாக்கஸ் (தியாஸ்)
அதுல மாய ப்டாலமியாஸ் (பை எகிப்து 285-247
லாடெல்பாஸ்)
அன்தேகின அண்டிகோனஸ் மாஸிடோணியா 277-239
(கொனாடஸ்)
மக மகாஸ் கைரீனே 285-258
அலக ஸுதர அலக்ஸாந்தர் எப்பைரஸ் 272-258


ஸிரியா தேசத்துக்கும். மோரியரின் ஏகாதிபத்தியத்துக்கும் ஸெல்யுக்கஸ் காலத்திலிருந்தே நேசபாவம் இருந்து வந்தது. மெகாஸ்தனிஸ் போன்ற யவன தூதர்கள் மோரிய ராஜதானியில் யவன அரசரின் காரியங்களை நோக்கி வந்தனர். அதனால் அசோகன் இந்த அயல் அரசருக்கும் தனக்கும் மிக அருமையென்று தோன்றிய சுவிசேஷத்தைத் தெரிவித்தது ஆச்சரியமில்லை. அசோகன் இங்கு தர்மத்தைப் போதித்ததுடன் திருப்தியடையாமல் வைத்தியசாலைகளையும் மிருக ஆஸ்பத்திரிகளையும் ஸ்தாபித்து அவற்றைப் பரிபாலித்து வந்தான்.