பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனுடைய சாஸனங்கள்

32

காலங்கமார்க்கத்தையே தர்மம் என்ற சொல்லினால் 
சோகன்
காலத்தில்
பெளத்த மதத்
தில் ஏற்பட்ட
மாறுதல்கள்

குறிக்கிறான். ஆயினும் அவன் புத்தருடைய காலத்தில் மதத்தில் விசேஷ பற்றுள்ளவனாயிருந்தானென்பதில் ஐயமில்லை. அவன் எட்டுப்படிகளுடைய ஸம்போதி என்ற ஞானமார்க்கத்தை வழிபட்டதாக ஓரிடத்தில் கூறப்பட்டிருக்கிறது (எட்டாம் சாஸனம்). மற்றோரிடத்தில் அரசன் பௌத்தமதத்தின் மும்மணியாகிய புத்தன், தர்மம், ஸங்கம் என்பதைத் தான் சரணமடைவதாகச் சொல்லப்படுகிறது (பாப்ரு சாஸனம்). இதே சாஸனத்தில் அரசன் சில பௌத்தக் கிரந்தங்கள் விசேஷ ஒளியுடையனவென்று தான் மதிப்பதாகக் கூறுகிறான், ஒன்பதாவது பட்டாபிஷேக வருஷத்தில் அரசன் புத்தரின் கொள்கை மிகச் சிரேஷ்டமென்று உணர்ந்து பதின்மூன்றாம் ஆண்டில் ஸங்கத்தில் சேர்ந்துகொண்ட விவரங்களை முன் சொன்னோம்.

அரசன் பௌத்த ஸங்கத்தின் ஓர் அம்சமானதும் அதுபற்றி அவனுக்குப் பௌத்த ஸங்கத்தின் தலைமை ஸ்தானம் ஏற்பட்டதென்று நாம் ஊகிக்கலாம். பௌத்த மகா ஸபைகளில் எல்லாருடைய வாக்கும் சமமான மதிப்புள்ளதென்றாலும், அசோகன் தனது ஏகாதிபத்தியத்தின் செல்வத்தையும் செல்வாக்கையும் பௌத்த ஸங்கத்துக்கு உரிமையாக்கியதால் அவனுக்கு ஸங்கத்தில் விசேஷ கௌரவம் ஏற்பட்டிருக்கவேண்டும். அரசனின் சகோதர சகோதரிகளும் புத்திரரும் புத்திரிகளும் ஸங்கத்தைச் சேர்ந்தனரென்று ஐதிஹ்யத்தில் சொல்லப்படுகிறது. அதனால் பௌத்த மதத்துக்கு அதிக மகிமையுண்டாயிற்று. இப்போது பூமியில் பௌத்த மதம் கோடிக்கணக்கான ஜனங்களின் மதமாயிருப்பது அசோக-