பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் தர்மம்

35

உணர்ச்சியின் வலி குன்றியது, நூறு வருஷங்களுக்குள் பௌத்த ஸங்கமானது பன்மையிலேயே, ‘ ஸங்கங்கள்,' என்று கூறவேண்டிய ரீதியில் பல பிரிவுகளாய் மாறிற்று, பல பிரமுகர்கள் இந்த ஸ்திதியைக் கண்டு வியசனமடைந்தனர். கொள்கை வேறுபாடுகளை நீக்கவும் ஜீவிதத்தில் ஒற்றுமையையும் ஒழுங்கையும் ஏற்படுத்தவும் பல முயற்சிகள் செய்யப்பட்டன. இவற்றுள் மகா ஸபைகளைக் கூட்டியது மிகவும் முக்கியமானது.

முதலாவது மகாஸபை புத்தர் இறந்தவுடன் ராஜக்கிருஹம் என்ற நகரில் நடைபெற்றது. புத்தர் சரமாரியாய்ப் பொழிந்த தர்மோபதேசங்களையும் நுட்பவாதங்களையும் இனிய சம்பாஷணைகளையும் உலகம் ஒரு போதும் இழந்துவிடாவண்ணம் காப்பாற்ற வேண்டுமென்று ஸபை தீர்மானஞ் செய்தது. இவற்றைத் திரட்டுவதற்காக புத்தருடன் நெருங்கிப் பழகிய சீஷர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். பௌத்த தர்மத்தின் தத்துவங்களைப்பற்றி அப்பொழுதே அபிப்பிராய பேதங்கள். ஏற்பட்டனவென்று நாம் அனுமானிக்க இடமிருக்கிறது. ஆனால் அவை பகிரங்கமாகவில்லை. ஸங்கத்தை ஒன்றாகக் கட்டுவதற்கேற்ற ஏற்பாடுகளும் சில செய்யப்பட்டன. ஸபையானது எல்லா பிக்ஷுக்களும் அனுசரிக்கலேண்டிய சட்டங்களைப் பிரசுரஞ்செய்தது. ஸங்கத்தில் சேர்ப்பதற்குள்ள சடங்கு (இதற்கு உபஸம்பதம் என்று பெயர்) நிச்சயிக்கப்பட்டது. ஆயினும் ஸங்கத்தை ஏகோபிக்கச்செய்த ஏற்பாடுகள் கைகூடவில்லை.

புத்தருக்குப் பின் அவருடைய ஆப்த சீஷர்கள் ஞானப்பொக்கிஷமென்று மற்றோரால் கருதப்படுவது இயல்பே, இவர்கள் கூறியவை புத்தரின் சுய வசனங்களாககக் கருதப்பட்டு, இந்தப் பிரதம சீஷர்களின் சீஷர்க-