பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அசோகனுடைய சாஸனங்கள்

வாழ்கின்ற ஜனங்களுக்கும் தர்மத்தைப் போதித்து வர வேண்டுவதே தர்மமகாமாத்திரரின் அலுவல் என்று கூறப்படுகிறது.

ரஜூகர் என்பவர் மாகாணங்களின் தலைவராயிருந்தனர். அர்த்தசாஸ்திரத்தில் இவர்களை ஸ்தானிகர் என்று கூறப்பட்டிருக்கிறது. இவர்களின் ஆளுகையில் அடங்கிய பிரதேசத்திற்குச் சாஸனங்களில் “ஜனபதம்“ என்று பெயர் கூறப்படுகின்றது. இதன் ஜனத்தொகை அனேகலக்ஷம் என்று சொல்லப்படுகின்றது. ஜனபதத்தின் துரைத்தனத்தில் ரஜூகருக்கு முன்னிலும் அதிக சுதந்திரத்தை அசோகன் அளித்ததாக நான்காம் ஸ்தம்பசா ஸனம் கூறுகின்றது. ப்ராதேசிகர் என்பவர் ரஜூகரின் கீழுள்ள நிர்வாக அதிகாரிகளாம். மகாமாத்திரர் என்ற பதம் இவ்விருவகை அதிகாரிகளுக்கும் மற்றும் பலருக்கும் பொருந்தும் பொதுப் பெயர். புலிஸர் அல்லது புருஷர் எனப்படுபவர் அரசன் காரிய தரிசிகள் போலும். மற்ற அதிகாரிகளின் வேலையை மேல்நோக்கி அவரைச் சோதனை செய்வது இவர் வேலையென்று நாம் ஊகிக்கலாம். அந்தமகாமாத்திரர் என்ற அதிகாரிகள் காட்டுஜாதியாரையும் எல்லைப்பிரதேசங்களிலுள்ள அநாகரிக ஜனங்களையும் கவனித்து வந்தனர். அரசனுடைய பொறுமையைச் சோதிக்கக் கூடிய தொந்தரவுகள் இந்த ஜனங்களிடமிருந்து வந்து கொண்டிருந்தனவென்று பதின் மூன்றாம் சிலாசாஸனத்தில் குறிப்பிடப்படுகின்றது. பதிவேதகர் என்பவர் அரசனுடைய அரண்மனையில் விசாரணைக்காக வரும் வழக்குக்களைக் கவனிக்கவேண்டிய அதிகாரிகளாம். விஷயத்தை உடனுடன் அரசனுக்குத் தெரிவித்து நியாய விசாரணையை நடத்தி, வழக்குகளைத்தீர்ப்புச்செய்வது இவர்களுடைய அலுவல் எனலாம்.