பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் அரசாட்சி

55

விருசபூமிகர் என்றும் ஸ்திரீமகாமாத்திரர் என்றும் பெயர்பெற்ற அதிகாரிகள் பன்னிரண்டாம் சாஸனத்திற் கூறப்படுகின்றனர். ஆனால் பெயர் கூறப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்திலிருந்து அவர்களுடைய அலுவல் ஊகிக்கக் கூடவில்லை. வியோஹாலகர் என்பவர் நகர அதிகாரிகள் போலும், யுக்தர் ஆயுக்தர் என்பவர் கீழ்த்தர அதிகாரிகள். வ்யூதர் என்பவர் துறவிகளாகிய தர்மப் பிரசாரர்கள் போலும். சாஸனங்களில் வருகின்ற சொற்களுள் வ்யூதர் என்ற பதத்தைவிட அதிகமாகப் பண்டிதர்களுக்கு இடையில் பலவித வாதப்பிரதிவாதங்களுக்குக் காரணமாயிருக்கும் பதம் வேறு இல்லையென்று சொல்லலாம்.

அனுஸம்யானம் என்ற ராஜீய ஸ்தாபனத்தைப்பற்றி 
அனுஸம்யானம்

மூன்றாம் சாஸனத்திலும் கலிங்க சாஸனத்திலும் கூறப்படுகின்றது, இதன் கருத்தென்னவென்பதை வித்வான்கள் இன்னும் நிச்சயித்துக் கூறவில்லை. அதிகாரிகள் ஸ்தல மாறுதல், சுற்றுப்பிரயாணம் செய்துவருதல் என்ற பொருள் இங்குப் பொருத்தமுள்ளதாக நமக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு பிரதேசத்தினுடையவும் முக்கியமான காரியங்களைத் தீர்மானஞ்செய்ய அதிகாரிகள் ஜனங்களை அல்லது ஜனத்தலைவர்களை ஓரிடத்தில் வரவழைத்து அவருடன் ராஜீய விஷயங்களைப்பற்றிப் பேசுவதே அனுஸம்யானம் என்று சில வித்வான்கள் கூறுவது பொருந்துமென்று தோன்றுகிறது. மூன்றாம் சாஸனத்தின்படி அனுஸம்யானத்தின் நோக்கமாவது, “அதிகாரிகள் தங்கள் வேலையைச் சரிவர முடிப்பதும் தர்மத்தை எல்லோருக்கும் போதிப்பதுமே”. பாடலிபுரத்தைச் சுற்றி அனுஸம்யானமானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், உஜ்ஜயினி - தக்ஷசிலா மாகாணங்களில் மூன்று ஆண்டு