பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்காலத்துப் பழம்பொருள்கள்

61

ஸாஞ்சியிலுள்ள பிரதான ஸ்தூபம் ஆதியில் சுமார் 
ஸாஞ்சி ஸ்தூபம்

எழுபத்தெட்டடி உயர்ந்திருந்தது. தற்காலம் அதன்மேலுள்ள அலங்காரங்கள் போய்விட்டன ; ஆதலால் அது ஐம்பத்து நான்கு அடி உயரமிருக்கிறது. இக்கட்டிடத்தின் மிக அழகான வேலைப்பாடு நான்கு திசைகளையும் நோக்கி நிற்கும் வாசல்களாம். இவை முப்பத்து நான்கு அடி உயர்ந்து மிகக் கம்பீரமான தோற்றத்துடன் விளங்குகின்றன. இவ்வாசல்களின் மேல்பாகத்திற் கல்லினாற் பலதோரணங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இலேசான மரக்கட்டையைக் கையாளுவதில் தச்சனுக்கு எவ்வளவு கைலாகவமும் திறமும் நுட்பமும் ஏற்படலாமோ அப்படிப்பட்ட லாகவமும் நுட்பமும் நாம் அங்குள்ள கல்சிற்பங்களில் காண்கிறோம். சில வாசல்கள் பிற்காலத்தவையாயிருந்தாலும் அந்த ஸ்தூபத்தை அசோகன் காலத்துச் சிற்பத்திறமைக்கு மாதிரியாக நாம் வைத்துக் கொள்ளலாம்.[1]

பர்ஹுத் என்ற ஊரிலுள்ள ஸ்தூபமும் அசோகன் 
பர்ஹுத்
ஸ்தூபம்

காலத்ததே. இது ஸாஞ்சிக்குச் சுமார்

இருநூறு மைல் கிழக்கே உள்ளது. ஸ்தூபம் சுட்டசெங்கற்களினால் செய்யப்பட்டது ; ஆயினும் புறமுள்ள கல்வேலியின் கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மிக அருமையானவை. வேலியிலுள்ள கற்களெல்லாம் அக்காலத்து நடை உடை பாவனைகளை விளக்கும் சிற்பங்களால் நிறைந்திருக்கின்றன. ஜாதகக் கதைகள் என்பவை கெளதம

  1. 🞸 ஸ்ரீ. ரிஸ் டேவிட்ஸ (Rhys Davids) என்பவரால் எழுதப்பட்ட “பௌத்த காலத்து இந்தியா” (Buddhist India) என்ற புஸ்தகத்தில் இக்காலத்துச் சிற்பங்களின் படங்கள் பல இருக்கின்றன.