பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனுடைய சாஸனங்கள்

74

பதில் ஐயமில்லை; ஏனென்றால் அரசனன்றி வேறெவரும், எவ்வளவு சுதந்திரமுடையவராயினும், எழுதத் துணியாத வாக்கியங்கள் பலவற்றை நாம் சாஸனங்களிற் காணலாம். பல லிகிதங்களும் “தேவர்களுக்குப் பிரியனான பியதவஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான்” தேவானாம் பியோ பிய தஸி லாஜா ஏவம் ஆஹா என்றோ, அல்லது இவ்வாக்கியத்தைக் கொஞ்சம் மாற்றியோ தொடங்குகின்றன.

அசோகனுடைய சாஸனங்கள் மிகப் புதுமையான 
இவற்றின்
தன்மை

தஸ்தாவேஜுகளாம். இந்தியாவிலுள்ள வேறு ஒரு அரசனும் இப்படிப்பட்ட சாஸனங்களை எழுதிவைத்திலன். இச் சாஸனங்களும் பலவகைப்பட்டன. சில, அரசன் தன் அதிகாரிகளுக்கு அனுப்பிய கட்டளைகளின் பிரதிகள் போலிருக்கின்றன. மற்றவை அரசன் ஜனங்களுக்கு அனுப்பும் விளம்பரங்களென்று தோன்றும். தர்மப் பிரசாரத்தில் அரசன் கொண்ட மிகுதியான உற்சாகத்தினால் பலசாஸனங்களில் அரசன் ஜனங்களுக்குத் தர்மத்தைப் போதிக்கிறான். இவற்றை அரசன் சட்டங்கள் என்று கொள்ளக்கூடாது. இப்போதனைகளைப் பிரஜைகள் மீறி நடக்கிறதைப்பற்றி அரசன் வியசனமடைந்தாலும் ஜனங்களைக் கட்டாயப்படுத்தவோ மீறுதலுக்குச் சிக்ஷைகள் விதிக்கவோ விரும்பினதாக நாம் எண்ண இடமில்லை.

இந்த லிகி தங்களுடைய வாசகரீதி சிற்சில இடங்களிற் சுருக் 
வாசகரீதி

சுருக்கமாக அமைந்திருக்கிறதென்றும் மற்ற இடங்களில் விரிவாயிருக்கிறதென்றும் அசோகன் கூறுகிறான் (பதினான்காம் சாஸனம்). சுருக்கமாக அமைந்திருக்கிற பாகங்கள் இல்லையென்றே சொல்லலாம். மிக விரிந்து தளர்ந்த வாசகரீதியே இவற்றின் விசேஷகுணம். சுருங்கச்