பக்கம்:அசோகர் கதைகள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை ஒன்று

9

ஒரு திட்டம் உருவாயிற்று. அசோக மன்னரைப் பார்த்துத் தன் துன்பத்தை எடுத்துக் கூறினால், தனக்கு நிறையப் பணம் கொடுக்கமாட்டாரா என்று எண்ணினான். நேரம் ஆக ஆக, அந்தப் பெரியவர்கள் அரசரைப் புகழ்ந்து பேசப் பேச, அவன் எண்ணம் வலுப்பட்டது. ஆகவே எப்படியும் அசோகரை நேரில் பார்த்து விடுவதென்று அவன் உடனே அங்கிருந்து புறப்பட்டான்.

தலைநகரம் மிகத் தொலைவில் இருந்தது. அவ்வளவு தொலையும் அவன் நடந்துதான் போக வேண்டியிருந்தது. ஒருநாள் முழுவதும் நடந்த பிறகும் தலைநகரம் வெகு தொலைவில் இருப்பதாகவே தோன்றியது. மேலும் ஐந்தாறு நாட்கள் நடந்து சென்றால்தான் அங்கு போய்ச் சேரமுடியு மென்று வழிப்போக்கர்கள் சொன்னார்கள்.

பேசாமல் திரும்பிவிடலாமா என்று நினைத்தான். ஆனால், கவலையைத் தீர்ப்பதற்கு என்று ஒருவர் இருக்கும் போது அவரைப் பார்க்காமல் இருப்பது சரியல்ல என்று தோன்றியது. எப்படியும் அசோக மன்னரைப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

ஒரு முறை உறுதியான முடிவு ஏற்பட்ட பிறகு அவன் பின்வாங்கவில்லை. என்ன தான் கடுமையாக இருந்த போதிலும், பசியையும், களைப்பையும் பொறுத்துக் கொண்டு அவன் வழி நடந்தான்.

வழிப்போக்கர்களில் ஒரிருவர் அவன்மீது இரக்கப்பட்டு ஓரிரு முறை தங்கள் கட்டுச் சோற்றில் சிறிது கொடுத்தார்கள். சில வேளை அவன் அரைப் பட்டினி யாகவும், சில வேளைகளில் முழுப்பட்டினியாகவும் இருக்க நேரிட்டது. வயிற்றைக் கிள்ளும் பசியைப் பொறுத்துக் கொண்டு, கால்வலியைப் பொருட்படுத்தாது அவன் நடந்து கொண்டேயிருந்தான். காட்டுச் சாலைகளிலும், ஊர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/11&oldid=734132" இலிருந்து மீள்விக்கப்பட்டது