பக்கம்:அசோகர் கதைகள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை இரண்டு

21

போல் வருகிற விருந்தினர்கள் விஷயத்தில்தான் கையாள முடியும். நாள்தோறும் விருந்தினர் வந்துகொண்டேயிருந்தால் அதெல்லாம் நடைபெறக் கூடிய காரியமா, என்ன? அதற்காக அந்த ஊர்க்காரர்கள் வருகிற விருந்தினர்களை விரட்டியடித்து விடவில்லை. அவர்களே உபசரிப்பதையே ஒரு தொழிலாக மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

இருக்க இடமும் உண்ண உணவும் தேடி வருபவன், அவை அடியோடு கிடைக்காவிட்டால்தான் வருத்தப்படுவான். காசு கொடுத்துக் கிடைக்குமென்றால் நல்லதாகப் போயிற்று என்றுதான் எண்ணிக் கொள்வான். முன்பின் தெரியாதவர்களிடம் பழகுகிற கூச்சம் சிறிதும் இல்லாமல் பழக முடியுமல்லவா? இந்த மாதிரியான நேரங்களில் காசு செய்கிற உதவி பெரியதுதான்.

அந்த ஊரின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் மாமன்னர் அசோகர் அங்கே ஒரு சத்திரம் கட்டும்படி ஏற்பாடு செய்தார்.

சத்திரம் ஏற்பட்ட பிறகு அந்த ஊரின் சிறப்பு மேலும் அதிகமாயிற்று. வழிப்போக்கர்களுக்கும் நல்ல வசதியாயிற்று.

சத்திரத்து அதிகாரிகள் வழிப்போக்கர்களின் தராதரத்தையறிந்து வாடகை வசூலித்தார்கள். வாடகையில் உயர்வு தாழ்வு கிடையாது. எல்லோருக்கும் ஒரே மாதிரி யான வாடகைதான். ஆனால் ஏழைகளாயிருந்தால் வாடகை கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் ஏழைகள் தாம் என்று சத்திரத்து அதிகாரிகள் தீர்மானித்து விட்டால் போதும். வணிகர்களும் மற்ற தொழில் செய்பவர்களும் சத்திரத்துக்கு உள்ள வாடகையைக் கொடுத்து விட வேண்டியதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/23&oldid=734144" இலிருந்து மீள்விக்கப்பட்டது