பக்கம்:அசோகர் கதைகள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை மூன்று

61

தான் கீழே நின்றான். அவனுடைய அமைச்சர்களும் எழுந்து வணங்கி நின்றனர்.

அசோகரிடமோ, ஈசுவரநாதனிடமோ அப்போது வாளில்லை. வேறு எவ்விதமான ஆயுதமுமில்லை. ஆனல் அந்தச் சிற்றரசன் ஏன் அப்படிப் பணிய வேண்டும்? வணங்க வேண்டும்?

சின்னஞ்சிறு பிள்ளை கூட இதன் காரணத்தைக் கூறி விட முடியும் வஞ்சகமாக, அசோகரிடம் அந்தச் சிற்றரசன் நடந்து கொண்டிருந்தால் அந்தச் செய்தி வெளிப்பட்டவுடன் அவனுக்கு என்ன கதி நேரிட்டிருக்கும் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியாது. மக்களிடையே அசோகருக்கு அவ்வளவு மதிப்பிருந்தது; அவ்வளவு அன்போடு மக்கள் அசோகரை நேசித்தார்கள். இதை அந்தச் சிற்றரசன் அறியாதவனல்ல. ஆகவே, அவன் எதிர்பாராத விதமாக - ஆயுதமற்றுத் தன் முன்னிலையில் திடுமென வந்து நின்ற அசோகரைக் கண்டவுடன் வியப்பும் திகைப்பும் அடைந்து வணங்கி நின்றது ஆச்சரியத்திற்குரியதல்ல.

ஆனால், ஒரு பகைவன் கோட்டையில் துணிந்து நுழைந்து கையில் எவ்விதமான படைக்கலனுமின்றி நெஞ்சுறுதி ஒன்றே துணையாக அவன்முன் நிற்கின்ற தன்மை அசோகரை யன்றி வேறு யாருக்கு வரும்? ஈசுவரநாதன் அசோகரின் நெஞ்சுறுதியைக் கண்டு பிரமித்தவாறே அவர் பின் நின்றான்.

வணங்கி நின்ற சிற்றரசனை நோக்கி அசோகர் சில கேள்விகள் கேட்டார். அவன் படையெடுத்துக் கலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/63&oldid=734187" இலிருந்து மீள்விக்கப்பட்டது