பக்கம்:அஞ்சலி.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 வா. ச. ராமாமிருதம்

“அம்மா ‘ஒ’ன்னு அழுதுட்டாள். ‘நீங்கள் இப்படித் தான் எப்போதைக்கும் இருக்கப் போறேளோ?ன்னு கேட்டாள்.

“அப்பா முழிச்சார். ‘என்ன? எப்படி?’

“நல்ல வேளையா இதுவரை பெத்ததெல்லாம் தக்காமல் போச்சோ, நான் நல்லதங்கா மாதிரி நடுச்சந்தியிலே நிக்காமே நிக்கறேன்! ஆனால் நம் குடும்பத்துக்கு இனிமேல் கதி மோட்சமே கிடையாதா? உங்களுக்கு திருந்தறதா உத்தேசமே யில்லையா?”

“அப்பா கொஞ்சம் அலண்டு போயிட்டார். ‘என்னை என்னடி பண்ணச் சொல்றே? என்னை எதிலுமே தக்க வொட்டாமல் ஏதோ ஒண்னு தள்ளின வண்ணமாயிருக்கே! நான் என்ன பண்ணுவேன்? இத்தனை வயசுக்கு மேல் என்னைத் திருத்த முடியும்னு உனக்குத் தோணறதா? இனிமேல் நான் திருந்தித்தான் என்ன ஆகனும்?”

“இந்த ரீதியிலே இரண்டுபேரும் ஏதோ ரொம்ப நாழி தர்க்கம் பண்ணியிருக்கா. அம்மாவுக்கு அழுது அழுது மூஞ்சி வீங்கிப்போச்சு. மாரே வெடிச்சுடும் போலிருந்தது. அம்மா திடீர்னு கண்ணை மலர மலர முழிச்சாளாம். அப்பா பயந்துபோய், சின்னக் குழந்தை மாதிரி, ‘நான் இனிமே சரியா இருக்கேண்டி’ன்னு சொல்லித் தவிச்சாராம். அம்மாவுக்குப் பேச்சே திடீர்னு மூச்சு ஆயிடுத்தாம்.

“எனக்கு இடுப்பு வலியெடுத்துப் போச்சு. எப்படியாவது வீட்டிலே கொண்டுபோய்ச் சேர்த்துடுங்கோ.”

அப்பா அம்மாவைப் பாதி தூக்கிண்டும் பாதி இழுத்துண்டும் போனார். ஆனாலும் முடியல்லே. அதோ. அங்கே அந்தத் தென்னைமரம் தெரியறது பாருங்கோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/16&oldid=1020525" இலிருந்து மீள்விக்கப்பட்டது