பக்கம்:அஞ்சலி.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கினி 15

 “உன் பேரைக் கண்டேன். போகப்போக உன் பேரைப்போல்தான் நீயுமிருக்கிறாய் என்பதைக் கண்டு. கொண்டிருக்கிறேன்.”

“நானும் என் வீட்டாரும் மஞ்ச நீராடிய பின் நாலாம் நாள் இங்கே பாலிகை கொட்டவந்த பொழுது என் மனசுக்குள் என்ன வேண்டிண்டேன்னு தெரியுமா?”

“தெரியுமா?” என்று அவன் திருப்பிப் பரிகசித்தான்.

“உங்களுக்கு எல்லாமே சிரிப்புத்தான். இருந்தாலும், நான் சொல்லுவேன். சொல்லத்தான் போறேன். ‘ஏ காவேரி! நீ என்னை எப்படி இதுவரை காப்பாத்தி என்னை எப்படி ஷேமப் படுத்தினையோ அதேமாதிரி, எங்கள் குழந்தைகளையும் காப்பாத்திக் கொடுக்கணும். உன் கரையிலேயே என் குழந்தையைப் பெற்றுக்கொள்ள நான் ஆசைப்படுவேன்.—”

அவன் பதில் பேசவிலலை, சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

அவளுக்கு எரிச்சலாய் வந்தது. அவன் வாயிலிருந்து சிகரெட்டை ‘வெடுக்’கெனப் பிடுங்கி எறிந்தாள். இருளில் அதன் நுனிப் பொறி கர்ணம் அடித்துத் தூரத்தில் விழுந்து அவிந்தது.

“ஏன் நீங்கள் இந்த மாதிரி பண்றேள்? நான் குழந்தைப் பேச்செடுத்தாலே வேறே எதிலேயோ ஏன் இப்படி முனையறேள்? ஏன் இப்படி அலட்சியமா இருக்கேள்?”—அவள் குரலில் கோபக் கண்ணிர் தளும்பிற்று.

அவன் குரல் இருளில் மெத்தென்று இறங்கிற்று. ‘'நீ குழந்தை குழந்தை என்று பேசும்போதெல்லாம் என்னையும் உன்னையும் பிரித்துப் பேசுகிறாய். இவ்வளவு நாழியாய் நீ சொன்னதெல்லாம் எனக்கு இன்பமாயிருக்கிறது. அத்துடன் இழைகிறேன். நீ சொல்வதோடு நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/25&oldid=1020544" இலிருந்து மீள்விக்கப்பட்டது