பக்கம்:அஞ்சலி.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கினி 37

டாக்டர் தன் சோதனைகளை முடித்துக்கொண்டு நிமிர்ந்தார்.

“இடுப்பு எலும்பு ஒண்னு முறிந்திருக்கிறது. அதாவது பரவாயில்லை. மண்டையிலே உளளுற அடிபட்டிருக்கிறது. எப்படி எங்கே இவ்வளவு இசை கேடாய் விழுந்தாங்க? நான்போய் ஆம்புலென்ஸ் அனுப்பறேன்.”

***

“எங்கள் ஊர் ஜலம் வத்தவே வத்தாது. நூலாகவாவது ஓடிண்டுதாணிருக்கும். காவேரியா, லேசா? என்னென்று நினைச்சுண்டிருக்கே? வாயிலே வெச்சா கல்கண்டு தோத்தது போ—உ—ஹூம்—என்னன்னுடி நினைச்சுண்டு இருக்கே!—ஐயோ அம்மா வலிக்கிறதே! எங்கேடி போயிட்டே!

***

“எனக்கு நீச்சல் தெரியும்னு உங்களுக்குத் தெரியுமோ? ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் எங்கள் ஊரிலே பத்து நாள் தங்கியிருந்தார். அவர் ஆம்படையாளும் கூட வந்திருந்தாள். நம்மாதிரிதான்!—

கலகலவெனக் குழந்தைச் சிரிப்பு.

“அந்த மாமி மலையாள சீமை அவள்தான் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தாள். அடேயப்பா! அவள்மாதிரி ஆம்பளைகள்கூட நீந்த முடியாது. ஜலத்திலே மல்லாக்கப் படுத்து மணிக்கணக்கில் மிதப்பாள் மத்தியான வேளையிலே ஒருத்தருக்கும் தெரியாமல் போயிடுவோம் அவள் மாதிரி மிதக்காட்டாலும் கொஞ்ச நாழியாவது என்னாலே மிதக்க முடியும்...”

“ஒருநாள் மழை பேஞ்சுது. ஒடிப்போய் ஜலத்தில் விழுந்தேன். என்னைத்தவிர ஒருத்தருமில்லை. மல்லாந்து படுத்து, வாயைத் திறந்துண்டுகட்டையாய் மிதந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/47&oldid=1022878" இலிருந்து மீள்விக்கப்பட்டது