பக்கம்:அஞ்சலி.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 61

மாஞ்சி அக்காவைப் பார்த்ததேயில்லை. ஆனால் இப்போது அவளுக்கு ஏனோ நினைவு வந்தது. கணவனும் மனைவியுமாய்க் கையைப் பிடித்துக்கொண்டு சத்திரத்திலிருந்து வீட்டுள் நுழைந்ததும் நேரே ஜமதக்னி இந்தப் படத்தண்டை வந்து நமஸ்கரித்த பின்தான் தாயை வணங்கினான். அங்க அசைவில் அவள் பக்கம் அவன் முகம் தற்செயலாய்த் திரும்புகையில் அவன் கண்களில் ஸ்படிகம் வழிவது கண்டாள். தானும் படத்திற்கு விழுந்து கும்பிட்டு எழுந்திருக்கையில், படத்திலிருந்து அந்த அன்பு கனிந்த நோக்கு அவள் மேலும் குனிகையில், நெஞ்சை என்னவோ செய்தது. அது ஒரு நிமிஷந்தான். அனால் அதே பார்வைதான் அன்றிலிருந்து இன்னமும், மீனா—நீனா—பாச்சு—இவர்கள் எல்லோருக்கும் முன்னால் ஒண்ணு—அன்றிலிருந்து இன்னமும்.

ஜமதக்னி தட்டை எட்டி நகர்த்தினான். அவன் முகம் மாறிவிட்டது.

“அப்பா, நேக்கு அப்பா நேக்கு?”

“இந்தா எடுத்துக்கொள்ளுங்கள்—”

மாஞ்சிக்கு ஏனோ பயமாயிருந்தது, தான் ஏதோ தவறு இழைத்து விட்டாற்போல்.

“உங்களுக்குப் பிடிக்காதா?”

அவன் பதில் பேசவில்லை. கைகளை மடியின்மேல் நின்றாள். ஏனோ அவளுக்குப் பயமாயிருந்தது.

தன்மேல் கவிந்த படலங்களைச் சட்டெனக் கலைத்துக் கொண்டு ஜமதக்னி தலை நிமிர்ந்தான். அவளைப் பார்த்து சிறுநகை புரிந்தான்.

“ஏன் நிற்கிறாய் மாஞ்சி? உட்கார்”

மாஞ்சி நெற்றிப் பொட்டைத் தடவிக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/71&oldid=1033413" இலிருந்து மீள்விக்கப்பட்டது