'உள்ளதைக் கொண்டு திருப்திப்படு' என்று சொல்வது மடத்தனமான புத்திமதி. உன்னிலும் உயர்ந்தவனைக் கண்டு பொறாமைப்படாதே, உன்னை விடத் தாழ்ந்தவனின் நிலையைவிட உனது நிலை அம்மா பெரிதென்று அகமகிழ்க! என்ற நீதிவாக்கியம் உருப்பட விடாமலடிப்பது.
உழைப்பவனை அடிமையாக்கி வைப்பதற்காக விளையாடவிட்ட கடவுள் விதி. கர்மம் முதலிய சிறுமை எண்ணங்களைப் போன்றவையே இச் சின்னத்தனமான புத்திமதிகளும் என்பது எனது எண்ணம்.
மனிதனது வாழ்க்கை நிலை உயரவேண்டுமானால், இத்தகைய முட்டாள்தனமான எண்ணங்களுக்குச் சாவுமணி அடித்தாக வேண்டும்.
உழைத்து வேர்த்தபடி விடுதிரும்புகிறான் ஒரு தொழிலாளி. அவனுக்கு காத்திருக்கிறது ஆறின கஞ்சி. அதற்கோ உப்பு கூட இல்லை.
மற்றுமோர் உழைப்பாளிக்குக் கஞ்சிக்கும் லாட்டரி. அவன் பழஞ்சோற்றுப் பானை நீரைச் சல சலக்க விடுகின்றான். பருக்கை ஒன்றிரண்டு கூட இல்லை. வெறும் 'நீராகாரத்தை' ஊற்றி வயிற்றெரிச்சலைத் தீர்க்கிறான் .
அதே வேளையிலே, சும்மா மெத்தையிலே சோம்பிப் புரண்ட சீமானுக்கு மாலைக் காப்பி வருகிறது. ஸ்வீட்டும் ஸாவரியும் வருகின்றன. ஆரஞ்-