பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

இல்லை. அவன் சுத்த சோம்பேறியாக இருக்கலாம். ஜம்பப் படிப்பு, கல்யாணப் படிப்பு என்ற தன்மையில் கலாசாலை சென்று வந்தவனாக இருக்கலாம்; மண்டூகமாக இருக்கலாம். -

என்றாலும் அவன் ஒய்யார வாழ்வு வாழ்கிறான். அநாவசியமான ஆடம்பரச் செலவு, போலி கெளரவம் பெற ஜம்பச் செலவுகள், உல்லாசமாகப் பேசி மகிழ்கிற - அவன் புகழ் பாடுகிற - நண்பர்களுக்கு சப்ளைச் செலவு - இப்படி எவ்வளவோ பணம் தண்ணிச் மாதிரி ஓடுகிறது அவன் கையில், ஏன்?

அவன் முதலாளி மகன் முதலாளி. பணக்காரக் குடும்பத்திலே பிறந்துவிட்ட செல்லப் பிள்ளை என்ற ஒரே காரணத்தினால், அவன் இஷ்டம் போல் ஊதாரித்தனமாக வாழமுடிகிறது.

இவ்விதமான புல்லுருவிகளைக் கண்டும் காணாதது போல் கண் மூடிக்கொண்டு, தெருவிலே பிச்சை எடுப்பவனைப் பார்த்து 'அம்மா பெரிதென்று அக மகிழ வேண்டுமென்றால், அது போன்ற முட்டாள் தனம் வேறு கிடையாது என்பேன்.

வாழ்வு சில உயர வேண்டுமானால், சமுதாய அந்தஸ்து மாறவேண்டுமானால், உயிர்க்குலத்திலே மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமானால், பொருளாதார அமைப்பு மாற்றப்பட வேண்டும். உள்ளதைக் கொண்டு திருப்தியடைபவர்களால் அது சாத்தியமில்லை.

புதிதாகப் பிறக்க, ஆராய்ச்சிகள் உதயமாக, முதலில் எண்ணி எண்ணி உயர் நிலையில் ஆசை கொண்டு, நம்பிக்கை வைத்து, போராடியாக வேண்