டும். பழைய நிலைமை ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அழித்துவிடத்தான் வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களை 'மாறு அல்லது மாண்டு போ!' என்று தான் அறிவுலகம் எச்சரித்து வருகிறது.
தங்களே உணர்ந்து, தங்கள் போக்கையே மாற்றிக் கொண்டு, மனிதகுலத்துக்கு சகோதர மனிதர் என்ற தன்மையில் நியாயமானதைச் செய்ய முன் வராதவர்களின் பொய்மை வாழ்வுக்குச் சாவுமணி அடிக்க வேண்டிய காலம் விரைந்து கொண்டிருக்கிறது,
அன்று -
பிறப்பால் உயர்ந்தவர்கள், கடவுள் கருணையால் பணக்காரர்களாகவே பிறந்தவர்கள், பூர்வ ஜனம் புண்ணியத்தால் உழைக்காமலே உல்லாச வாழ்வு பெற்றுவிட்டவர்கள் என்பன போன்ம துரோகச் செயல்களுக்கு சாவுமணியடித்து சமாதி கட்டப்படும்.
தேவகி
(நாவல்)
வல்லிக்கண்ணன் எழுதியது அவள் ஒரு தாசி. தொழில் விரும்பாத யுவதி குடும்புப் பெண் ஆக விரும்பினாள். திருமணம் நிகழ்ந்தது. வாழ்வின் மறுமலர்ச்சி மணமுள்ளதாயில்லை. மறுபடியும் வழுக்கி விழுந்தாள். ஏன்?
இது தான் கதை
இது சாந்தி நிலைய வெளியீடு