பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

கின்ற தொழிலாளி எதிர்காலத்தைப் பற்றி இன்பக் கனவு காண்பதால் என்ன பிரயோசனம்?

தனது வாழ்க்கையைப் பற்றி அவன் எண்ணப் புகுந்தால், - இனி என்ன செய்யலாம்? நமக்கு வேலை போய்விட்டால் வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வது? பிழைப்பதற்கு வேறு என்ன செய்ய வேண்டும்? நமக்கு வியாதி வந்தால் என்ன செய்வது? பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாற்ற என்ன செய்வது? - என்ன செய்வது, என்ன செய்வது என்கிற பிரச்சனைகளே பயங்காட்டும். மூளையைக் குழம்புச் செய்துவிடும்

உழைப்பவர்களுக்கு உலகம் விதித்திருக்கிற வாழ்வு, அவர்கள் உலகில் உயிர்வாழும் வரை உழைத்தேயாக வேண்டும் என்பது. உழைத்து உழைத்துச் செத்துக்கொண்டே வாழ்கிறவர்கள், செத்துச் சேர்த்து உழைத்து அலுத்து மூச்சைவிட்டு உண்மையாகவே செத்தியபோகும் போது தான் ஒய்வும், வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து விடுவித்துக் பெறமுடியும், இன்றைய சமுதாய அமைப்பிலே.

உழைப்பவர்களுக்கு நோய் வரக்கூடாது. நோய் வந்தால் அவர்கள் சிக்கிரம் சாவது நல்லது. ஆனால் மரணம் என்ன எல்லோருக்கும் சுலபமாகவா வந்து விடுகிறது; அதனால் நோய் நீங்கினும் உள்ளக்கவலை நீங்குவதில்லை, கடன் சுமை நீங்குவதில்லை. இவை அழுத்தும் போதுது ஆள் தேறப் போவதுமில்லை, தேறுவதற்கான தேவையான சத்தான, உணவும் கிடையாது. நல்ல வைத்திய வசதிகளும் கிடையாது.ஆகவே தனக்கு தன்னை நம்பி உயிர் வாழ்