உழைத்ததனால் அவருக்கு காசநோய் கண்டது. அவர் இனி சரியாக - நிறைய உழைக்க முடியாது எனக் கண்ட முதலாளி அவரை வீட்டுக்கு அனுப்பினர் சீட்டுக் கிழித்து. பணம் தரவில்லை, அன்பளிப்பாக போகட்டும். ஏட்டிலே பாக்கி என்பதற்காக, உள்ள அற்பச்சம்பளத்திலே கூடப் பிடித்துக்கொண்டார் ஒரு தொகையை, பணம் கடனாகக் கேட்டார் உழைப்பாளி, கிடைக்கவில்லை. மருந்து அவர் கடையிலே இருந்தது தான் - கடனாகக் கேட்டார். மறுக்கப்பட்டது. விலை கொடுத்துக் கேட்டபோது கூட, 'பிளாக் மார்க்கெட் ரேட்டு’ தான் சொன்னர் முதலாளி கறாரான விலை. 'கழிவு இல்லை'! என்று அந்தக் கணக்கருக்கு உண்மையான விலை தெரியும். உண்மையாக உழைத்தவர் தான். என்றாலும் கொள்ளை விலை'யில் தான் அவருக்கு மருந்து கொடுக்கப்படும் என்றார் முதலாளி. அது பிஸினஸ் பிஸினஸில் முதலாளிக்கு லாபம் தான் குறியே தவிர, உழைப்பவனின் உடல் நலம் அல்ல.
ஒரு தொழிலாளி. கை முறிந்து போயிற்று, மில்லிலே வேலை செய்யும்போது. அவரது அஜாக்கிரதையினால் அல்ல. எப்படியோ ஆபத்து விளைந்து விட்டது. கையைக் குணமாக்கிக் கொண்டு திரும்பிய போது வேலை இல்லை என மறுக்கப்பட்டது. அந்தத் தொழிலாளி உழைக்க ஏமாற்றும் பேர்வழியல்ல. எத்தனல்ல. உண்மையாக உழைத்தவர். உழைக்கத் தயாராகவும் இருந்தார். ஆனால், முதலானியின் அருள் பாலிக்கவில்லை.
இது பிஸினஸ் உலகிலே சகஜம்.
உழைப்பவர்களுக்கு அவர்களது உயிர் நிச்சயமில்லை. வாழ்க்கை நிச்சயமில்லை. வேறு நிச்சய