பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

பொதுவாக, மனித சமுதாயத்திலே புதுமை வாழ்வு நிலைபெற வேண்டுமானால், மக்களின் உழைப்பைச் சுயநலத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிற பண மூட்டைகள் மறைந்தால் மட்டும் போகாது.

மக்களை அறியாதவர்களாக்கி. அவர்களது அறியாமையை சுயலாபத்துக்கு உபயோகித்துக் கொள்கிற புரோகித வர்க்கமும் அவர்களது செயல்களும் ஒழியவேண்டும். மக்களை மடையர்களாய் மண்டூகங்களாய் வாழ வகைசெய்கிற - புரோகிதத்தின் மூலதனமான - மதம் கடவுளர்கள், கோயில், திருவிழா முதலிய எல்லாவற்றுக்கும் சாவுமணி அடித்தாக வேண்டும்.

இன்னும் கலையின் பெயரால் இலக்கியத்தின் பெயரால், அரசியலின் பெயரால், ஆராய்ச்சியின் பெயரால், விஞ்ஞானத்தின் பெயரால் மக்கள் உழைப்பை. மக்கள் காலத்தைச் சுரண்டி, சோம்பல் வாழ்வும் சுகபோகமும் பெற்று வாழ்கின்ற வீணர்களின் பண்புகளுக்கும் சாவுமணி அடித்தாக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் மடைமைச் செயல்கள், இழிந்த பண்புகள், குருட்டு நம்பிக்கை அறியாமை, சம்பிரதாய விலங்குகள் முதலிய எல்லாவற்றுக்குமே சாவுமணி அடித்தாக வேண்டும்.

மனிதர் மனிதராக உரிமையுடன், சுதந்திரமாக கவலையற்று, இன்பவாழ்வு வாழவேண்டுமானால்,