பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

வெறும் அரசியல் விடுதலை மட்டும் வழிகாட்டி விடமுடியாது.

சமுதாய சீர்திருத்தவாதிகளின் அடுக்குச்சொல் மாரிகள் மட்டுமே செப்பனிட்டுவிட முடியாது.

இலக்கியவாதிகளின் கவைக்குதவாத கனவுகளும் பித்தலாட்டப் புத்தகங்களும் மாத்திரமே. உயர் நிலை உண்டாக்கிவிட முடியாது.

மதவாதிகளின் வேத வேதாந்தங்கள், வியாக்கியானங்கள், உபன்னியாசங்கள், உபகிஷதப் பல கணிகள் எதுவுமே ஒளிகாட்டிவிட முடியாது.

பொருளாதாரவாதிகளின் புனரமைப்புத் திட்டங்கள் மட்டுமே வெற்றி காட்டிவிட முடியாது.

மனித சமுதாயம் நல்ல நிலைபெறவேண்டுமானால் அரசியல் விடுதலை எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் தான் சமுதாய சீர்திருத்தமும் பொருளாதாரப் புனரமைப்பும். இவற்றுக்குரிய போராட்டத்திலே ஈடுபடத் தூண்ட, செயலில் இறங்கியதும் ஆர்வத்துடன் வெற்றி காணப் போராடுவதற்காக வெற்றி கிட்டியதும் சிறந்த அமைப்புகளே நிர்வகிக்க இலக்கியங்கள் துணைபுரிய வேண்டும், துணைபுரிய முடியும். ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படுகிற இன்பக்களியாட்ட ஒலங்கள், அவை எத்தகைய அழகிய பெயரில் தரப்பட்டாலும் சரி, அவை சுயநலக்கும் பலின் பேத்தல்களே யாகும். அத்தகைய 'பூர்ஷ்வா' இலக்கியங்களுக்கு வருங்காலம் சாவுமனி அடித்துவிடும் என்பதற்கு நிகழ்காலமே சாட்சி.

இன்று மக்களின் பசி நீங்க வேண்டும். அன்றாடப் பசியைத் தணிப்பதற்கு வழிசெய்யும் வசதியான