பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35

இவையெல்லாம் அனுபவசாத்தியமாக வேண்டுமானால்- அரசியல், சமூகம், பொருளாதாரம் அனைத்திலும் நேர்மையும் உயர்வும் திகழ வேண்டுமானால் அறிவு விசாலமாக வேண்டும்.

பசியும், ஏழ்மையும், அறியாமையும், உரிமையின்மையும், இதுபோன்ற இழிதகைமைகள் எல்லாம் ஒழிக்கப்பட அரசியல் விடுதலை தேவை; சமூக சீர்திருத்த சேவை; பொருளாதார சமத்துவம் தேவை இவை நிலைத்து நின்று கல்ல பலன் அளிக்க அறிவின் பெருக்கம் தேவை.

மக்களிடையே சிந்தனைப் பொன்னொளி பரவ வேண்டும். அதற்கு இலக்கியம் துணைபுரியமுடியும்.

ஆனால், பசி, தரித்திரம், அடிமைத்தனம் இவற்றிடையே முதுகெலும்பற்ற புழுக்களாய், பூச்சிகளாய் உழல்கின்ற சாதாரண மக்கள் அடிப்படை கல்விக்குக் கூட வசதியற்று உழைப்பிலே சாகிறார்கள். சின்னஞ் சிறுவர்களைக் கூட முட்டாள்களாக்கி உழைப்பிலே ஈடுபடுத்த வேண்டிய நிலையில்தான் உள்ளனர். கல்வி கற்பதற்கு உரிய வசதிகளும் காலமும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்றாகி விட்டது. அதனால்தான் அறியாமை அந்தகாரம் உலகெங்கும் கவிந்திருக்கிறது. அதனால் தான் இன்னும் விடியவில்லை புதுயுக உதயத்தின் ஒளி தெரியவில்லை

இருள் நீங்கி ஒளிபெறவேண்டுமானல், அடியுங்கள் சாவும்ணி -

சோம்பலின் தொண்டர்களுக்கு