இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏழ்மைக்கு பசிக்கு தரித்திரத்துக்கு அடிமைத்தனத்துக்கு அறியாமை அந்தகாரத்துக்கு, மதத்துக்கு, மடத்தனத்துக்கு , பண மூட்டைகளுக்கு புல்லுருவிகளுக்கு. கருங்காலிகளுக்கு. சுரண்டும் கும்பலுக்கு. சுயநலத்துக்கு.
மனிதனை மனிதராக வாழ விடாத அனைத்துக்கும் அடியுங்கள் சாவுமனி!
சிந்தனை எங்கும் பரவட்டும்.
சிந்தனையின் செந்தீ திக்கெலாம் அறிவுச்சுடர் பரப்பி, ஒளிகாட்டட்டும்.
உயிர்க்குலச் சிறுமைகள் ஒழியட்டும்.
ஒழியட்டும் அழியட்டும்!
அடியுங்கள் சாவுமனி!
விழித்தெழுந்து வீறுகொண்டு உரிமைகளைப் பெறுவோம் என உறுதிகொண்டு உழையுங்கள். முன்னேறுங்கள்!
படவுலகில் கடவுளர்கள் படும் பாட்டை விளக்கிய
கோரநாதன்
மீண்டுக் எரிமலை அனல் பொறி சிதறுகிறார்
படவுலகின் மீது!
விரைவில் வெளிவரும்
சினிமாவில் அப்பாவிகள்!
இது எரிமலைப் பதிப்பக வெளியீடு