பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நீடித்த நிலையான வாழ்வு

நீட்டி நிமிர்த்தி வைத்தல்

நீட்டி நிமிர்ந்து சாய்ந்து கொள்ளல்

நீட்டி நெளித்துச் சோம்பல் முறித்தல்

நீட்டு முடக்கில்லாதவன் - குடும்பக் கவலையற்றவன்

நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் பெற்று வாழ்க

நீண்டு குழன்று இருண்டு நெறிந்து செறிந்து சரிந்து கடை சுருண்ட கூந்தல் (கம்ப 5-4-47)

நீண்டு விரிந்து பரந்து கிடக்கின்ற

நீதி நியாயத்தைக் கவனிக்காமல் பேசுதல்

நீதி நேர்மை நியாயம் இல்லாதவர்

நீதி முறை இல்லாமல்

நீதியும் நிர்வாகத் திறனும் நிறைந்த ஆட்சி

நீதியும் முறைமையும் வழுவா நெறி நில்

நீந்திக் கடத்தல்

நீருள்ளளவும் நிலமுள்ளளவும் கதிருள்ளளவும் இருப்பது

நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண் (புறம் 164)

நீரொடு நிறைந்த பேரமர் மழைக்கண் (அகம் 395)

நுகர்ந்து அநுபவித்தல்

நுங்கு நுரையோடு ஓடும் காவிரி

நுங்கும் நுரையுமாய்ப் பொங்குங் கடல்; அடிக்கும் அலைகள்

நுட்ப புத்திமான் திட்ப சித்தவான் (பழ)

நுட்பமாகவும் திட்பமாகவும் கூறுதல்

நுட்பமாய் நுணுகியுணர்தல் (இளவழகனார்)

நுட்பமாயும் திட்பமாயும் அறிதல்

நுட்பமும் திட்பமும் ஒட்பமும் வாய்ந்த உரை