பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

முத்தென முகிழ்ந்து மென் முறுக்கு அவிழும் முல்லை

(பாகவத பு 10-16-32)

முதலும் முடிவுமில்லாத

முதிர்ந்த அறிவும் பழுத்த அனுபவமும் உடைய

முப்பொழுது உணரும் முனிவரன் (வில்லி 10-150)

மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பை - உடல் (குமர

549)

முயக்கு இடை அறியா மயக்கு (-ஈருடலும் ஓருடலாய்க்

கலந்தின் புறல்) (ஞானா 28)

முயற்சியும் உழைப்பும்

முரட்டுத் தடியர்கள்

முரி திரை முத்தென முகிழ்க்கும் மூரலன் (பாகவத பு

1-8-36)

முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் (குமர 61)

முல்லென் முகையென மெல்லென் மூரல் (ஞானா 13)

(மூரல் - சோறு)

முல்லை சான்ற கற்பின் மெல்லியல் (மகளிர்) (சிறுபாண்

30; அகம் 274)

முல்லை வெண் முகையனைய மூரல் (அமுதா பி த 19)

முழவுறழ் திணி தடந்தோள் (நைட 627)

முழவெனத் திரண்ட திண்தோள் (சிந் 368)

(அறநெறியில்) முழுக்க முழுக்க முழுகித் திளைத்தவர்

முழுகி முக்குளித்து விளையாடல் (புதுமைப்)

முழுது உணர்வரம்பில் கேள்வி முனிவர் (வில்லி 10-

107)

முள் எயிற்றுத் துவர்வாய் முறுவல் (அகம் 39)

முள் எயிறு இலங்கும் முறுவல் (பெருங்க 1-33-177)

முள்ளிலும் கல்லிலும் நடத்தல்

முள்ளும் முடையுமாய்க் கிடக்கும் காடு