பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

வசையில் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றல்

(புறம் 159)

வசையையும் பசையையும் பொருட்படுத்தாது பணி

யாற்று

வஞ்சகத்தை நெஞ்சகத்தில் கொண்டவர்

வஞ்சக நெஞ்சகத்தார்

வஞ்சக நெஞ்சப் பஞ்ச பாதகன்

வஞ்சக நெஞ்சனைக் கண்டு அஞ்சுக

வஞ்சகம் மிஞ்சிய நெஞ்சினர்

வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் (வில்லி 22-36)

வஞ்சனைக்கு அஞ்சாத நஞ்சினும் கொடிய நெஞ்சினர்

(மனோன்மணீயம் 3-1-12)

வட்டவடிவமான

வட்டியும் முதலுமாக வாங்கி விடுதல்

வடி கட்டிய முட்டாள்

வடுகு பொடுகாச்சு வைக்கோற்போர் நெல்லாச்சு (பழ)

வண்ணமும் வடிவும் அழகியவள்

வண்ணமும் வனப்பும் வரியும் வாட வருந்தும் தலைவி

(அகம் 119)

வணக்க இணக்கம் உடையவர்

வணக்கமும் வழிபாடும் ஆற்றுதல்

வணங்கிப் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்

வணங்கிப் புகழ்ந்து வழுத்துதல்

வணங்கி வழிபடல்

வணங்கி வழுத்துதல்

வணங்கி வாய் புதைத்து நிற்றல் (பெருங்கதை)

வணங்கியும் நுணங்கியும் வருந்தும் மருங்குல் (சூளா

452)

வந்தனை வழிபாடு செய்துவரல்

10