பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சாதி சமய மதபேதம் (தவிர்த்த)

சாதி சமய வேறுபாடுகளை அகற்றல்

சாதித்து நிலை நாட்டு தல்

சாது சன்னியாசிகள்

சாதுரியமாயும் மாதுரியமாயும் பேசுதல்

சாதுரியமும் மாதுரியமும் விளங்கப் பண்ணிசைத்தல்

சாந்தமும் அமைதியும் ததும்பும் முகம்

சாந்தியும் சந்தோஷமும் சதா நிறைந்த மனம் (வை. மு. கோ.)

சாந்தியும் சமரசமும்

சாப்பாட்டிற்கு கூப்பாடு போடுகின்ற மக்கள்

சாமர்த்தியமாயும் சாதுரியமாயும் கூறல் (வை. மு. கோ.)

சாய்ந்து சரிந்து கிடக்கும் சுவர்

சாய்வு சரிவு இல்லாத சமதளம்

சாயல் மாயலாய்ப் பேசுதல் - சாடை மாடையாய்ப் பேசு தல்

சாயலாய் மாயலாய் வேலை செய்து வைத்தல்

சாரம் சப்பு இல்லாத - உப்புச் சப்பு இல்லாத (பேச்சு)

சால்புஞ் செம்மையுஞ் சான்றவர் (நற் 196)

சால மாலமாய்ப் பேசுதல் - வஞ்சகமாகப் பேசுதல்

சாவகாசமாயும் சாங்கோபாங்கமாகவும் நடந்த பொதுக் கூட்டம் (கல்கி)

சாவடி சத்திரங்கள்

சாறற்ற சக்கை (பாரதிதா)

சாஸ்திரம் சம்பிரதாயம் பார்க்காத

சிக்கடி முக்கடியாய்க் கிடக்கும் நூல்

சிக்கல்களையும் சிரமங்களையும் நன்குணர்ந்தவர்

சிக்கல் பிக்கல் - தாறுமாறு, முட்டுப்பாடு